களைகள்
அகற்றக் கழனிசூழ் நாற்றை
முளையில் பிடுங்கும் முறையாம்;
-களைநேர்
கறுப்புப் பணமகற்ற நல்லப்
பணமும்
தெறுத்திட்ட மோடிச் செயல்!
சேர்த்த பணம்சிறிதும் செல்லாது
போனதால்
கோர்த்தெடுத்து வங்கியில்
கொண்டுகொட்டப் –பார்த்திருந்து
வாராப் பெருங்கடனை வள்ளல்போல்
தள்ளுகிறான்
பாராளும் மோடிப் பயல்!
பெருவணிகன் எல்லாம் பெருங்கடன்
காரன்;
இருங்கட னைச்சிறிதும் ஈயான்;
-தெரிந்திருந்தும்
ஏழைப் பணம்சுருட்டி ஏய்த்தோன்
கடன்தீர்க்கும்
கோழை அரசைக் கொளுத்து!
திருடன் விடுத்துத் திருட்டுப்
பொருளை
வருடம் முழுதும் வளைத்தால்
–திருட்டுப்
பொருளற்றுப் போமோ? புதிதாய்
முளைக்கும்
இருளுற்ற நேரம் இளித்து!
மல்லையா பெற்றகடன் மக்கள்
வரிப்பணம்
இல்லையா? ஏமாற்றிச் சென்றவனைக்
– கொல்லாமல்
உள்ளபடி இங்கவன் உற்ற கடனையெல்லாம்
தள்ளுபடி செய்தல் தவறு!
செலுத்தத் தவறினான் சென்றொளிந்து
கொண்டான்
உலுத்தன் இவனை ஒழித்தால்
– வலுத்தவன்
பெற்ற கடனைச் சிறிதும்ஏ மாற்றாமல்
முற்றும் அடைப்பான் முனைந்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக