பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
ஆழிதான் ஆங்கே அளவிலா நீர்பெற்றும் சூழும் நதிநீர் துணைகொள்ளும் -ஆழப் படித்தோம்நாம் என்றெண்ணிப் பற்றுவிடல் வேண்டா படிக்கும் பழக்கத்தைப் பற்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக