கட்டு
மரமே!அக் காலனையே ஏமாற்றி
விட்டு நலமாக வீடுவந்தாய்;
– துட்டு
மரமே! உனக்கு மரணமே இல்லா
வரமே அவன்தந்தான் வந்து!
கரையொதுங்கும் என்றன்றோ கண்டிருந்தார்;
நீயோ
கரையேறி வந்த கவினை – உரைப்பதெனில்
அப்போலோ செல்லாமல் காவேரி
சென்றதனால்
இப்போது மீண்டாய் இனிது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக