அவையடக்கம்:-
நூலறிவோ என்றால் நுனிப்புல்லே
மேய்ந்தவன்நான்
வாலறிவுக் கந்தோ வகையில்லை
–நாலறிவு
கிட்டியதாய்ச் சொன்னால் கிணற்றுநுணல்
வாய்விட்டுக்
கத்தியதே போலாகுங் காண்!
நாணைத்தா னேற்ற நவில்கின்றீர்;
நெஞ்சத்தில்
நாணைத்தா னேற்றுகிறேன் நானிங்கே
–காணிற்
கரும்புவில் ஏந்தும் கவிஞர்முன்
அந்தோ!
இரும்புவில் அன்றோ எனது!
சனிக்குளியல் போடும் தகைஞர்முன்
காக்கைத்
தனிக்குளியல் போடப் புகுந்தேன்
–இனிக்கும்
புலவர்சொற் குண்டு புகழிலக்க
ணம்நல்
மழலைச்சொற் குண்டோ மரபு?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக