செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

விமர்சன வெண்பா!

 

விமர்சன வெண்பா!

 

சித்திர பாவை திறமுடன் தீட்டிய

சித்தரப் பாவைத் திறனாய்ந்தேன் -சித்தம்

விரும்பியிவர் செய்த விசித்திரப் பாக்கள்

கரும்பிற் கணுவெனக் காண்! .1

 

மாலியின் ஓவிய வன்மையும் பாட்டெழுதும்

வாலியின் நற்றிறமும் வாய்த்தவரா(ம்)? -வாலியின்முன்

மள்ளம் தனைக்காட்டும் மன்னர் நிலையொக்கும்

வெள்ளிய பாவதன் வீறு! .2

 

தால்தனில் ஏற்றித் தகவுடன் பாடிட

ஏல்கிற பாவிளக் கேற்றினார்? -நூல்தனில்

தூண்டிலாய் ஓவியம் தோன்றிட மீன்தானே

ஈண்டிவர் பாவெனல் ஏற்பு! .3

 

என்றோ இறந்ததாய் எண்ணும் வடமொழி

இன்றிங் கிவரால் எழுந்ததே; -இன்றுமுதல்

பொன்றிற்றே ஆரியப் பூணூல் மொழியெனார்;

 நின்றிற் றிவர்வழி நீடு! .4

 

இலையோ? உளதோ? இடைதான் மடவார்க்(கு)?

இலைபோல் உளதோ? இதன்நேர் -நிலைதான்

இரகமத் பீபி இயற்றிய நூலிற்

பொருட்செறி வென்பதும் போ! .5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக