தண்ணீரே உயிர்காக்கும் அரும ருந்து!
தண்ணீரே எவ்வுயிர்க்கும்
தாய்ப்பால் ஆகும்!
தண்ணீரே ஈடில்லா உணவு மாகும்!
தண்ணீரே உயிரா தாரம்!
தண்ணீரே இந்நிலத்தின் அரிய செல்வம்!
தண்ணீரை உடையவரே செல்வர் ஆவர்!
தண்ணீரே நம்வாழ்வும் வளமு மாகும்!
தண்ணீரே இறைதந்த வரமு மாகும்!
பன்னீரே ஆனாலும் பருகு தற்குப்
பார்மிசையில் ஒல்லாதே! அதனால் கொஞ்சம்
நன்னீரின் தேவைக்காய் நாளை இந்த
நானிலமும் சண்டையிடும்; நலிந்து சாகும்;
உண்ணீரின் தேவைக்காய்க் குருதி கொட்டும்;
உப்புவியர் வைசிந்தும்; உலரும் வாயும்;
தண்ணிரின் தேவைதனை நன்க றிந்து
தக்கவழி தனில்சேர்ப்போம் வீணாக் காதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக