தமிழன்கை அன்றே ஓங்கும்!
3/12/12
மலையாளி ஆண்டான்; நம்மை
வடுகனுமே
ஆண்டான்; தண்ணீர்
இலையென்ற கன்ன டத்தின்
ஏந்திழையும்
ஆண்டாள்; என்றும்
நிலையாகத் தமிழர் நாட்டை
நின்றாளத்
தமிழன் போந்தால்
கொலைவாளுக் கஞ்சி யோடும்
கோழைபோற்
பதுங்கு கின்றோம்!
அண்டைமா நிலத்தா னெல்லாம்
ஆள்கிறான்
நம்மை; வந்து
மண்டைமேல் ஏறிக் குந்தி
மகிழ்கிறான்;
எதிர்த்துக் கேட்டால்
சிண்டைத்தான் பிடித்தி ழுத்துச்
சிதைக்கிறான்;
துடித்தெ ழுந்து
பெண்டைத்தான் நிமிர்த்தா
விட்டால்
பேடிகள்
நாமென் றாவோம்!
தானாடா விட்டா லென்ன?
சதையாடும்
என்பார்; அந்த
ஊனாடா விட்டா லென்ன?
உயிராட
வேண்டும்; நம்மை
ஏனாள வேண்டும் மாற்றான்
எனும்கேள்வி எழுந்தால் போதும்
தானாக மாற்றம் தோன்றும்
தமிழன்கை அன்றே ஓங்கும்!
ஈதென்ன தமிழர் நாடா?
இங்குவந்
தேறி கட்குத்
தோதென்றே ஆள விட்டுத்
துன்பத்தில்
ஆழும் நாடா?
தீதெல்லாம் இங்கு வந்து
திருவென்ற
தோற்றம் காட்டின்
கோதென்றே ஒதுக்கி டாமல்
கொண்டாடல்
தமிழர் பீடா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக