விடுதலை
நாடகம்!
விடுவதுபோல் விடுகின்றேன்;
விரைந்து வந்து
விடாவண்ணம் தடையிட்டே இடுவாய்
தூக்கில்
அடிபெண்ணே! என்பதுபோல் இங்கொ
ருத்தி
அண்மித்த தேர்தலுக்காய் நாட
கத்தைச்
சுடச்சுடவே அரங்கேற்று கின்றாள்;
மூவர்
தூக்கிற்கே தூக்கிட்ட நயன்மை
மன்றும்
விடுகவெனும் ஆணைதனை விளப்பி
டாமல்
விடுவதெனில் விடுகவென்ற விளைவால்
அன்றோ!
தாலிகட்டி அறுத்தவளும்; தாலி
தன்னைத்
தன்கழுத்தில் ஏற்காத தடிப்பெண்
தானும்
வேலிகட்டி ஆளுகின்ற இந்த
நாட்டில்
விடுதலையா வார்எழுவர் என்னும்
பேச்சு
போலிஅதில் உண்மையில்லை; தேர்தல்
தன்னில்
பூந்தமிழர் இவர்கட்குப் புகட்டிப்
பாடம்
காலிகளை அடைப்பதுபோல் பட்டி
தன்னில்
கருத்துடனே அடைத்திடுதல்
கடமை என்பேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக