செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

 

கொடுத்தபடி தொடுத்த பாடல்!

 

அறுசீர் மண்டிலம்

 

குறிலீற்று மா + விளம் + மா + விளம் + விளம் + மா

 

அச்சம் தருமணு உலையை

அகற்றிட அமைதியின் வழியில்

உச்சம் தொடுகிற போரை

உயர்த்தியே பிடிப்பவர் மீதில்

மிச்சம் ஒருசிறி தின்றி

வீசினர் தேசியச் சட்டம்

துச்சம் அதுவெனத் தள்ளித்

தொடருவோம் போரினைத் தமிழா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக