வெள்ளி, 17 அக்டோபர், 2025

 சத்துணவுச் சாம்பாரைச்

சப்பிக் குடித்துவிட்டுப்
புத்துணர்வு கொண்டதுபோல்
புல்லரித்து – முத்துநகை
பூக்கும் டிடியின்
புலுகுமுகப் பாவனைக்குத்
தூக்கிக் கொடுலட்சம்
துட்டு! 1
வாடகை வாய்களை
வாங்கிப் புகழ்பாடும்
நாடகமே டையில்
நடிக்கவைத்துச் – சாடையாய்ப்
பொய்களை உண்மைபோல்
போட்டுடைக்கச் செய்வதெல்லாம்
வையகம் காணாநல்
வாய்ப்பு! 2
காலையில் வைத்த
கருமத்தை மேடையில்
மாலையில் சாப்பிட்டு
வாய்விட்டு – வேலைகெட்டுப்
பேசியே வைத்ததுபோல்
பேசுகிறாய்; நல்ருசியா
ஊசிய சாம்பார்
உனக்கு!? 3
பொய்நிறையப் பேசிப்
பொழப்பு நடத்துகிற
மைநிறைந்த கண்ணகழகு
மங்கையே! - கைநிறைய
வாங்கிய காசுக்கா
வாயாரக் கூவுகிறாய்?
வீங்கியமார் தொட்டு
விளம்பு! 4
புழுநெளியும் தண்ணீரே
போஷாக்கா? கெட்டே
அழுகிய முட்டை
அமிழ்தா – வழுக்கிவந்து
பல்லி விழுந்த
பழுதுணவே சத்துணவா?
மல்லிகைச் சோறா
மணல்!? 05
நாயுண்ணக் கூட
நலமில்லா வெத்துணவைச்
சேயுண்ண எந்நாளும்
செய்கின்றார்; – நீயுண்ட
ஆறிய சாம்பார்நம்
ஆர்யபவன் சாம்பாரே
ஊறிய எச்சில்
உமிழ்! 6
அகரம் அமுதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக