வெள்ளி, 17 அக்டோபர், 2025

 மெட்டு!

கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
பல்லவி -
பொம்மைமுதல்வரே! பொம்மைமுதல்வரே!
என்ன இது? - தமிழ்
வார்த்தைச் செழுமையைச் சிதைப்பதை இன்றே
நிறுத்திவிடு...
பொம்மைமுதல்வரே! பொம்மைமுதல்வரே!
என்ன இது? - தமிழ்
வார்த்தைச் செழுமையைச் சிதைப்பதை இன்றே
நிறுத்திவிடு...
மதுப்பிரியர் எனச் சொல்லுவதா
குடி காரர்களை? – திரு
மணம்கடந்த உற வென்பதுவா
கள்ளத் தொடர்புகளை?
பொம்மைமுதல்வரே! பொம்மைமுதல்வரே!
என்ன இது? - தமிழ்
வார்த்தைச் செழுமையைச் சிதைப்பதை இன்றே
நிறுத்திவிடு...
சரணம் -
பெண்பித்தன் பெண் விரும்பி
ஆன தெல்லாம் உன்னாலே...
பொன்திருடன் தேவைக் காக
எடுத்துக் கொள்வோன் என்றாயே...
சாதிக்கும் இர்ரைச் சேர்க்கும்
சாதனைகள் செய்தாயே...
கையூட்டை அன்பளிப்பாய்க்
காரணப்பேர் தந்தாயே...
நோயாளி மருத்துவ பயனராய்
ஆனதுன் அறிவினிலே...
வாயாலே வடைசுட உனக்கினி
நிகரிலை உலகினிலே...
வந்தேறி நாடாள அழகிய
தமிழது அழிழுது கிடந்து..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக