உழவன்
பரவா யிலைஎன்நெல்
மூட்டை நனைந்தால்
முளைகட்டும்; – கோட்டையில்வாழ்
ஓங்கோல் முதல்வரே!
உம்குடையால் எங்களையும்
தீங்கின்றிக் காப்பாற்றச்
செய்!
முதல்வன்
வரும்படி தாரா
வயல்காட்டு நெல்லை
இருங்குடை காப்பதாய்
இல்லை; – ஒருதுளிநீர்
பட்டாலும் சாராயம்
பாழாகும்; நெல்மூடை
கெட்டாலும் கேடில்லை
கேள்!
உழவன்
வடிக்கும் உணவால்
வயிறு நிறையும்
குடியால் கெடுமே
குடும்பம்; – மடிநிறையப்
பொன்சேர்த்து வைத்தாலே
போதுமா? சாப்பாட்டுக்கு
என்செய்வீர் ஐயா
இயம்பு!
முதல்வன்
அதிகம்நீ பேசுகிறாய்;
அள்ளியென்மேல் சேற்றை
மதியின்றி வீசுகிறாய்
வாயால்; – பதிபோற்றும்
மாடல் அரசின்
மதுவுண்ணா மல்வார்த்தை
ஆடத் துணிந்தநீ
ஆர்?
உழவன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக