வெள்ளி, 31 அக்டோபர், 2025

 கைதான தெல்லாம்

கசமுசாவில் அன்றியவன்
பொய்தான் மிசாவிலுள்ளே
போனது – மைதா
பிசைவதுபோல் அங்கே
பிசைந்ததில்தான் தாடைத்
தசைகிழிந்தான் அந்தச்
சனி!
திருட்டு ரயிலேறிச்
சென்னைக்கு வந்த
குருட்டுமூ தேவிபெற்ற
கோட்டான்; – இருட்டுக்குப்
பெண்நான்கு கேட்கும்
பெருங்கா முகனவனா
மண்ணாள மேன்மையுள்ள
மன்?
லுச்சாப் பயலான
லூசுப் பயலாநம்
அச்சன்? தமிழா
அறிவில்லை? – நச்சரவாய்
ஈழத்தைத் தீண்டி
இனம்கொன்றோன் வாரிசா
வாழவைப்பான் நம்மையெல்லாம்
வந்து!?
புலிகேசி யான
புறம்போக்கா நம்மின்
வலிதெரிந்து வாழ்விக்கும்
வள்ளல்? – பலிகொடுத்து
தன்னினம் காப்பான்;
தமிழரை ஏய்ப்பான்;நீ
உன்னிலம் மீட்டினிதே
ஓம்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக