அம்மணபஸ் மக்களுக்கு;
ஜம்மெனப்போ ஓசியிலே
ஜார்ஜ்எதற்கு? – நம்பணும்நீ
நல்லா விடிஞ்சிருச்சு
நாடென்னும் பொய்களை;
இல்லாட்டி நீசங்கி
இங்கு! 01
குண்டியைக் காட்டிக்
குமரியைப் போலசையும்
வண்டியைத் தந்துள்ளார்
மக்களுக்கு – முண்டியடித்து
ஏறிப் பயணி; எருமைபோல்
வாழ்;கிடைக்கும்
மீறியெதிர்ப் பார்க்கு
மிதி! 02
ஓட்டை உடைசலுக்கு
ஓர்பேரிச் சம்பழமும்
சேட்டிடம் விற்றாலும்
தேறாதே; – கோட்டையில்
குந்தியவன் கோமாளி;
கூட்டமிது ஏமாளி;
இந்தநிலை மாறணுமே
இன்று! 03
பிங்குநிறப் பேருந்தே!
எங்களுயிர் காபந்தே!
இங்கிந் நிலையினிலும்
ஏன்வந்தே? – அங்கிளிடம்
நல்லபேர் வாங்கவா?
நாங்களெல்லாம் சாகவா?
சொல்லிவிடு என்னதானுன்
சோக்கு! 04
முண்டமாய்ப் போவதேன்?
மூலியாய்ப் போவதேன்?
தண்டமாய்ப் போவதேன்
சாலையில்? – மண்டுகளின்
ஆட்சிக்குச் சாட்சியா
ஆடையில்லாக் காட்சியா
நீட்டெழுதப் போறாயா
நீ? 05
பின்னாலே ஏறிய
பேருந்தே! இப்படியா
உன்னாலே ஓட்டை
உழவேணும்? - சொன்னாலே
பிங்குநிறப் பேருந்து
பின்குனிந்து காட்டாதா?
இங்குவெறி இம்மாம்
எதுக்கு!? 06
அசகாய சூரர்தம்
ஆட்சியில் ஒன்றும்
பிசகில்லை என்பதுவீண்
பேத்தல்; - நிசமாக
அன்றாடங் காட்சிகளின்
அல்லல் உரைப்பதெனில்
ஒன்றா? ஒருகோடி
உண்டு! 07
கேடுகெட்ட ஆட்சிக்குக்
கேட்கணுமா சாட்சிக்குப்
பீடுபெற்ற தென்பதெல்லாம்
பேச்சுக்கு; - நாடு
விடியல் பிடியில்
விளங்கான் மடியில்
முடியும் தருவாயில்
மூச்சு! 08
கடன்வளர்ந்து நாட்டின்
கழுத்தைப் பிடிக்கக்
கிடந்துமக்கள் வாழ்க்கை
கிழிய – அடம்பிடித்தோர்
நாட்டை விலைபேசும்
நாணையம் பெற்றுள்ளார்
ஆட்டையைப் போட்டூரை
ஆண்டு! 09
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக