வெள்ளி, 17 அக்டோபர், 2025

 நடிப்பிற் சிறந்ததமிழ் நாடு!

பத்துத் தலைமுறைக்குப்
பஞ்சம் வராதபடிச்
சொத்துக் குவித்த
சுடலையினால் – மெத்தப்
படிப்பிற் சிறந்தவரைப்
பார்க்கவொண்ணா மேடை
நடிப்பிற் சிறந்ததமிழ் நாடு!
கூத்தாடிக் கூட்டத்தைக்
கொண்டுவந்து மேடையிலே
பூத்தாட விட்டுப்
புலகித்துச் – சோத்துக்குச்
செத்த கதையைச்
சிறப்பாய்ப் பரப்புகிறார்
கொத்தடிமைக் கூட்டத்தைக்
கொண்டு!
திராவிட மாடல்
திரைக்கவர்ச்சி மாடல்,
சுராபான மாடல்,
துடுக்காய்ப் – பிராடுத்
தனம்பண்ணும் மாடல்,
தகிடுதத்த மாடல்,
இனம்கொல்லும் மாடல்
இது!
விரும்பத் தகாத
விளம்பர மாடல்
மருட்டி வதைத்திடும்
மாடல் - திருட்டுத்
தடியரின் மாடல்
தரங்கெட்ட மாடல்
விடியாத மாடல்
விடு!
திரைக்கவர்ச்சி தன்னால்
திசைத்திருப்பி நாட்டை
அரைகுறைகள் எண்ணிடுதே
ஆள; – வரைவின்றி
முற்றும் குடியில்
முழுகடிக்கும் தன்னாட்சிக்
குற்றம் குறைமறைத்துக்
கொண்டு!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக