வெள்ளி, 3 ஜூலை, 2026

19 ஜூன், 2021

 

19 ஜூன், 2021 

 

வரதன்:-

ஆண்கூற்று:-

கால்கொலுசை விற்று கடுகுமட்டும் வாங்கிவிட்டோம்;

பால்வாங்க நாளைப் பதக்கமுண்டு; - கால்வயிறு

கஞ்சிக்கொவ் வொன்றாய்க் கழற்று; சிரிப்புமட்டும்

எஞ்சிநின்றால் போதும் இரவு.

 

அகரம் அமுதன்:-

பெண்கூற்று:-

பஞ்சத்தில் பாழும் பசியில் உழல்கையில்

மஞ்சத்தில் சேர மனத்தவிப்போ? - கொஞ்சத்தான்

கூப்பிடும் முன்என்னைக் கொல்லும் பசிதீரச்

சாப்பிட வாங்கியெதும் தா!

 

வரதன்:-

ஆண்கூற்று:-

கதவுகளை மூடிவிட்டுக் காதல்கொள்; பின்னே

எதுவாயின் முன்னின்று எதிர்ப்பேன் -- அதுவரையில்

அப்பசியைத் தீர்க்கட்டும் ஆரம்; உரமூட்ட

எப்பொழுதும் நீதான் எனக்கு.

 

அகரம் அமுதன்:-

பெண்கூற்று:-

தீண்டுவதும் ஆடை திருடுவதும் நூலிடை

நோண்டுவதும் வேண்டாம் நிறுத்திக்கொள்; - வேண்டுவது

காப்பும் கரிசனையும் கண்இமை போலுறவை

மூப்புவரை காட்டும் முனைப்பு!

 

வரதன்:-

ஆண்கூற்று:-

எண்ணம் அறிந்தே இடைவருடும்; என்கைகள்

பொன்முகத்தைப் பார்த்தேபின் பூச்சூடும்; --- கண்நான்கில்

முட்டிக் கிடப்பதெல்லாம் மோகமில்லை; தெய்வீகம்

கொட்டிக் கிடக்குதெனக் கொள்.

 

அகரம் அமுதன்:-

பெண்கூற்று:-

பேசிக் கவிழ்ப்பதில் பேர்போன ஆளாச்சே!

ஏசி விரட்டினும் இங்ககலா(து) - யோசித்தே

இன்னும் ஒருதடவை என்றே இளிப்பவனே!

என்னமோ செய்போ எனை!

 

14 ஜூன், 2021

 

14 ஜூன், 2021

 

வரதன்:-

 

என்னப்பா பண்ரீங்க எல்லாரும்? சிந்திச்சி

என்னத்த நானும் எழுதுறது? -- எண்ணிப்

புதுசா எதாவது போடலான்னு பாத்தா

எதுவும் வரல எனக்கு.

 

அகரம் அமுதன்:-

 

இதோவரேன்; கொஞ்சமிரு; இன்னிக்கே ஓப்பன்;

மொதோரௌண்டை ஊத்தி முடிச்சா - அதோஅந்தக்

கற்பனை கூத்தாடும் கையிரண்டைக் கோத்தாடும்

சொற்குவித்துப் பின்வெண்பா சொல்!

 

வரதன்:-

 

சொல்ரேன் குவாட்டர்ல சோடாவ மிக்ஸ்பண்ணி

இல்லாம போகுதே எல்லாமும் --- சுள்ளுன்னு

வேகமா பாட்டெழுத ராவா அடிச்சாதான்

சோகமா வாரும் சொரந்து.

 

அகரம் அமுதன்:-

 

ராவாக உட்டா ரணப்பட்டுச் சீக்கிரமா

சாவாதா தேகம் சருகாகி? - நோவாம

மிக்சிங்க் கரைக்ட்டானா மேனிக்கு மோசமில்ல;

சிக்க(ன்)சைடு டிஷ்ஷானா கிக்கு!

14 ஜூன், 2021

 

7 ஆகஸ்ட் 2020

 

பெண் கூற்று:-

 

அவன்ஓர் கவிஞன்; அவன்பேர் அமுதன்;

எவளும் விரும்பும் எழிலோன்; - அவன்தான்

எனது மனதை எடுத்தான்; ஒளிந்தான்;

எனக்கவனைக் கண்டால் இயம்பு!

 

சிலை கூற்று:-

 

அந்தமுதன் போல அணிசமைப்பான் இன்னொருவன்

செந்தமிழின் நட்பாய்ச் சிலிர்ப்பவன் --- உந்தன்

அவனை மறந்துவிட்டு ஆழ்மனத்தில் கொஞ்சம்

இவனைவைத் துப்பார் இனி!

 

பெண் கூற்று:-

 

ஆள்மாற்றச் சொன்னால் அடிவிழும்; ஈங்கவன்

தோள்மாற்றி இன்னோர்தோள் தொற்றேனே; - மேல் மாற்றும்

ஆடைபோல் அல்ல என் ஆழ்மனக் காதல் பா(ல்)

ஆடைபோல் தூய தறி!

 

சிலை கூற்று:-

 

அல்லிமலர்த் தோட்டத்தில் அவ்வறளிப் பூக்காதா?

மல்லியிடம் ரோசா மலராதா?-- சொல்லக்கேள்

எண்ணத்தை மாற்ற இனிக்கும்; அதைவிட்டுச்

சொன்னதையே சொல்லாய் தொடர்ந்து!

 

பெண் கூற்று:-

 

கொம்பில் தான் பால்கறக்கக் கூடுமோ? பட்டமரக்

கம்பில்பூ பூக்குமோ? காண்எந்தத் - தெம்பில்நீ

என்னை மடைமாற்ற ஏதேதோ பேசுகிறாய்?

உன்னை உதைக்குமுன் ஓடு!

 

சிலை கூற்று:-

 

மன்ற தமிழை மணிமணியாய்ச் செய்கிறவன்

உன்றன் பொருத்தமென ஓர்கின்றேன் --- என்றன்

உளமறிந்து உந்தன் உளம்மாற்றும் மட்டும்

விலகுவதாய் இல்லை விடுத்து.

 

பெண் கூற்று:-

 

மாறுவதாய் இல்லை; மணித்தமிழன் மாமரபை

மீறுவதாய் இல்லை; மிகைப்படுத்திக் - கூறுவதை

விட்டு நடைகட்டு; வேறா ரிடமேனும்

கட்டுக் கதைகளைக் கட்டு!

 

சிலை கூற்று:-

 

பொன்தாலிச் செய்துப் புதுப்பட்டு நீயுடுத்த

நன்தாரம் ஆக்கவே நான்நினைத்தேன் -- வன்தாலிக்

கட்டித்தான் உன்னைக் கரம்பிடிக்க வேண்டுமென்றால்

எட்டிப்போ ஆமாம் இனி.

 

பெண் கூற்று:-

 

அடப்பாவி! ஏதும் அறியாத எந்தன்

இடம்மேவி இப்படியா ஏய்ப்ப(து)? - அடம்பிடிக்கும்

சேய்க்குக் கிடைக்கலாம் தேன் மிட்டாய்; உன்னுடைய

வாய்க்குநான் சூடுவைப்பேன் வந்து!

 

காணா ததைக்கண்ட காட்டான்போல் என்னிடத்தில்

வீணான வார்த்தைகளை வீசுகிறாய்; - ஆணான

என் தலைவன் கேட்டால் இனியுன் தலைதங்கா(து)

என்வழிக்கு வாராய் இனி!!

 

சிலை கூற்று:-

 

உன்னிலும் பேரழகி ஓடிவந்தாள்; விட்டுவிட்டுன்

பின்னோடி வந்தவனைப் பேசாதே --- என்பேச்சைக்

கேட்டு நடந்தால் கெடுதல் விலக்கியுனைக்

கோட்டையாள வைப்பான் கொடுத்து.

 

பெண் கூற்று:-

கோட்டையே தாண்டிக் கொடுமைக்காள் ஆயினள்

காட்டையும் ஆண்டமன் கண்ணாட்டி! - நாட்டிலோர்

கோட்டையும் வேண்டாமே; கொண்டவன் மண்குடிசை

வீட்டைநான் ஆள்வதே மேல்!

 

சிலை கூற்று:-

 

அக்காலப் பேச்சை அளக்காதே; வாழ்ந்துப்பார்

இக்காலப் போக்கில் இயல்பாக; - எக்காலுங்

காதலுக்குப் பின்போனால் கால்வாரி விட்டுவிடும்

ஆதலால் சொல்லக்கேள் ஆம்.

 

பெண் கூற்று:-

 

காலங்கள் மாறினால்  காதலும் மாறுமா?

சாலத்தைப் பேச்சில்நீ சாத்தாதே! - ஞாலத்தில்

ஆச்சரியம் யாதென் றறிந்துகொள்; பெண்மனதைக்

கூச்சமின்றிப் போடாதே கூறு!

 

சிலை கூற்று:-

 

பந்தல் இருந்தும் படரா அவரையெல்லாம்

கந்தலாகிப் போம்நடக்குங் காலடிக்கீழ் --- உந்தன்

நிலைஉயர்த்த வந்தவன்தான் நின்றன் வரதன்

மலைவாழ்வு வாழமனம் மாற்று.

 

பெண் கூற்று:-

 

பேச்சை அளக்காதே; பேதம் வளர்க்காதே;

கூச்சலினி நீபோடக் கூடாதே; - மூச்சில்

கலந்தவனை நான்தேடிக் கொள்கின்றேன்; நீயுன்

அளந்தவாய்ப் பேச்சை அறு!

 

ஞானிநீ என்றுன்னை நாடினேன்; நீயந்தக்

கூனிநேர் வைக்கின்றாய் கோல்மூட்டி; - நானினி

உன்னோடு பேச உளமில்லை; எட்டிப்போ!

என்னோடு வேண்டாம் இடக்கு!

 

இன்சொல் உரைப்பாயென் றிங்குவந்தேன்; கற்சிலைநீ

புண்சொல் புகட்டுகிறாய் புத்தியின்றி; - என்னினிய

கண்ணாளன் எங்கென்றால் கண்டவனை நீகாட்டிப்

பண்ணுமணம் என்பதா பார்!?

 

வழிசொல்லக் கேட்டேன்; மனங்கோணும் வண்ணம்

மொழிகின்ற நீயொரு முட்டாள்; - இழிசொல்லை

இத்தோடு நிப்பாட்(டு) இலாவிடில் உன்முடியைக்

கொத்தோ டறுப்பேன் கொதித்து!

 

உத்தமன் என்னவன்; உள்ளம் கவர்ந்தான்மேல்

குற்றமொன் றேற்றினால்  கொள்வேனா? - மற்றுமுன்

எச்சரிக்கும் பேச்செல்லாம் என்னிடத்தில் செல்லாது;

நச்சரிக்கா மல்நீ நட!

 

கன்னிமன வாழம் கருங்கல் அறிவதில்லை;

உன்னிடத்தில் பேசியது என்தவறு; - கண்ணினிய

காதலனை நான்தேடிக் கைப்பிடிப்பேன்; நீயுனது

ஆதரவை வேறாட்(கு) அளி!

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

 

 

5 ஆகஸ்ட், 2021

 

அகரம் அமுதன்:-

மொடாக்குடி காரன்நான்

முன்புவெண்பாக் கள்ளை

விடாப்பிடியாய் மாந்தி

விழுந்தேன் - தடாலடியாய்ச்

சாப்பிடுவ தில்லையென்று

சத்தியம் பண்ணிவிட்டேன்

'ஓப்பன்தி பாட்டிலெ'ன்போன்

ஓடு!

ஏடி வரதராசன்:-

சிக்கன் பிரியாணி

சில்லுன்னு கிங்பிஷ்ஷர்

"எக்"ஆம்லேட் பெப்பர்

எலாபிரேட்டா -- உக்காந்தா

ஒண்ணுரெண்டு பீரடிக்க

ஓய்விருந்தா வாஅமுதா

என்னையா யோசனை

இ ம்ம்ம்ம்........

அகரம் அமுதன்:-

கேப்விட்டா நல்லது

கேப்பே விடாமலெனைக்

கூப்பிட்டா வந்துன்னைக்

கொன்னுடுவேன்; - சாப்பிட்டா

எங்க குலசாமிக்(கு)

ஆகா(து) அதவிடுநீ

அங்ககூல் பீர்தானே

ஆங்!!!!

ஏடி வரதராசன்:-

ஆள்வந்தா போதும்

அமுதா... கிடைச்சிருக்கு

கூல்பீர்தான் ஒண்ணும்

குறையில்ல -- சீல்ஓப்பன்

பண்ணாம மில்ட்ரீரம்

பார்சலும் வச்சிருக்கேன்

என்னென்ன வேணுமோ

ஏத்து ....

அகரம் அமுதன்:-

மூடில்ல; வேணாம்

முடியாது; சாராயம்

பீடில்ல; சாப்பிட்டா

பேர்கெடும்; - கேடில்ல

சன்டேல மட்டும்

சரக்கடிப்போம்; கொஞ்சமிப்போ

தொண்டை நனைப்போம்

தொற!

 

5 ஆகஸ்ட், 2021 

2 ஆகஸ்ட், 2021

 

அகரம் அமுதன்:-

ஆளேந்தும் மேனி

அழகென் றதற்காக

வாளேந்தி வெட்ட

வருகின்றாய்; - தோளேந்து

வீரம் தொலைந்ததடி

வேட்கை பிறந்ததடி

ஓரம் ஒதுங்கியுனை

ஊட்டு!

அன்புவல்லி தங்கவேலன்:-

உடன்பட்டாள் என்றால்தான்

ஒப்புவாள் அன்றேல்

கடன்காரன் போலக்

கழிப்பாள் ‌- மடையனே!

வாள்வீசும் பெண்ணாள்

மனத்தில் இடம்பிடிக்க

நாள்பார்க்கச் சொல்லல்

நலம்!

அகரம் அமுதன்:-

நாளாய்ந்து மாலையிட

நான்ரெடிதான்; என்மனைவி

தேளாய்க் கடிப்பாள்

தெரிந்துவிட்டால்; - ஆளான

பெண்பூக்கள் கண்டால்

பெருமூச் செறிகின்றேன்

கண்பூத்து நெஞ்சம்

கலுழ்ந்து!

 

2 ஆகஸ்ட், 2021 

திங்கள், 29 ஜூன், 2026