திங்கள், 11 மே, 2026

 

வாங்கதம்பி வாங்க! வணக்கம்உட் காருங்க!

வாங்கிவந்த சால்வையை மாட்டுங்க! – நீங்க‍

தனியாளெல் லாமில்லை; தாத்தாநான் உள்ளேன்;

இனிமேல்நான் உங்க எடுப்பு! 01

 

தின்னப் பொறையும் சில‍எலும்புத் துண்டுகளும்

அன்றாடம் தந்தால் அகம‍கிழ்வேன்; – என்னினிய

தம்பிவிஜய்! நீங்க தருவீங்க; தின்றுநிதம்

கும்பி வளர்ப்பேன் குளிர்ந்து! 02

 

ஓசியில் சோற்றுடன் ஊறுகாய்க் கேமகுடி

வாசிப்பேன் நாளும் வகைவகையாய்; – யாசிக்க

நான்வருமுன் நீங்களே நாடிவந்தீர்; உங்களுக்கு

ஆன்தரும்பால் ஒத்த அகம்! 03

 

பைசா செலவின்றிப் பந்தி கிடைத்ததென்றால்

நைசாய் அமுக்கி நழுவிடுவேன் – சைசான

லெக்பீஸ் கிடைத்ததெனில் ரெண்டுதரம் சாப்பிடுவேன்

தக்லைஃப்என் வாழ்க்கைத் தரம்! 04

 

தீயசக்தி, தங்களைத் தீண்டா வணம்பெரியார்

தூயசக்தி காத்துத் துணையிருக்கும்; – காயகல்பம்

சாப்பிட்டுத் தெம்பாகத் தம்பிநன்றாய் ஆளுங்கள்

மூப்புவரை மூலை முடுக்கு! 05

 

வீர மணியென் விசனத்தைத் தீர்த்துவைத்த

காரணத் தாலுங்கள் கால்பணிந்தேன்; – பாரத‍த்தைக்

காக்கவந்த நாயகரே! கஞ்சிக்கோர் நல்வழியைக்

காட்டவந்தீர் வாழ்கவாழ் க! 06




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக