திங்கள், 4 மே, 2026

 

ஆக்டர் விஜய்நாட்டை ஆளும் அனுமதியை

வாக்குவழி மக்கள் வழங்கிவிட்டார்; – நாக்குத்

தடித்த திராவிடத் தற்குறிகள் நெஞ்சம்

இடிந்துபோய் உட்கார்ந்தார் இன்று!

 

தற்குறிகள் என்றுதிட்டித் தாவுமணில் என்றுசுட்டிக்

கற்பிதங்கள் நூறுசெய்து காட்டியும் – அற்புதமாய்

மண்ணதிரும் வெற்றியை மக்கள் மகிழ்ந்தளித்து

விண்ணதிரப் போட்டார் விசில்!

 

பிசிரடித்துப் போன பெரியார்தம் மண்ணில்

விசிலடித்தான் குஞ்சிகளின் வெற்றி – உசிரெடுத்த

டாடிக்கு நாம்டாட்டா காட்டியதால் வாய்த்தது

கூடிமே நான்கைக் குறித்து!

 

விளம்பர மாடல்; விடியாத மாடல்;

மளமளவென் றேசரிந்த மாடல்; - விளங்காத

மாடல்; தெலுங்கர்தம் மாடல்; திராவிட

மாடலிலே போட்டாரே மண்!

 

"மடக்கூதி* சின்னம் மகத்தான வெற்றி",

மடக்கூதி* என்ற மடையர் - மடக்கூதி*

ஆனதுதான் மிச்சம்; அகந்தையி னாலழிந்து

போனதுதான் மிச்சமிப் போ!

 

மடக்கூதி - மடக்கு ஊதி(விசில்), வசைச்சொல்.

 

முற்றும் கணிக்க முடியா வகையடைந்தோம்

வெற்றிவெற்றி யென்றே விசில்போடு; – சற்றே

சரக்கெடு கொண்டாடு; தாண்டவ மாடு;

உரத்தச் சரவெடி யோடு!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக