ஜோசப் விஜய்:-
கவர்னர்சார்! லெட்டர்
கவரோடு வந்தேன்;
தவறின்றித் டைப்பண்ணித்
தந்தேன்; - கவனமாய்ப்
பார்த்துப் பதவியைப்
பாவப்பட் டீந்தீரேல்
மார்தட்டி ஆள்வேனிம்
மண்!
விஸ்வநாத் அர்லேகர்:-
சொன்னால்கே ளுங்கள்;இத்
தொல்தமிழ் நாடாள
இன்னும் பதின்மர்
இவண்வேண்டும் - முன்வந்தே
ஆதரவை நல்கிட
ஆவலுடன் ஆருள்ளார்
சாதகமாய் இட்டுக்கைச்
சாத்து!?
ஜோசப் விஜய்:-
காங்கிரசில் ஐவர்
கரங்கொடுக்க முன்வந்தார்
வாங்கிவந்தேன் சம்மதித்த
வண்ணமடல் - ஈங்கிவற்றை
ஏற்றுப் பதவி
எனக்களிக்க வேண்டுமெனச்
சாற்றிப் பணிகின்றேன்
தாள்!
விஸ்வநாத் அர்லேகர்:-
இன்னும் அறுவர்
இவண்வேண்டும்; போய்க்கொணர்ந்தால்
முன்னுக்குப் பின்நான்
முரண்படேன்; - அன்றுமக்கே
ஆட்சி செலுத்தும்
அதிகாரம் ஈவேன்தாய்
சாட்சியாய் இஃதுத்
தமம்!
ஜோசப் விஜய்:-
இடதுசா ரிக்கும்
வலதுசா ரிக்கும்
மடலெழுதிக் கோரிக்கை
வைத்தேன்; - குடல்வற்றிச்
சாவதினும் என்பக்கம்
சார்வதுமேல் என்றுவந்தார்
ஆகவதுபா ரீரோ
அடுத்து!?
விஸ்வநாத் அர்லேகர்:-
தம்பி விஜய்!எந்தன்
தார்மீக தர்மத்தை
இம்மியும் மாற
இடமளியேன்; - வெம்பியழ
வேண்டாம்; இனுமிருவர்
வேண்டும்; அழைத்துவந்து
ஆண்டுகொள் ளுங்கள்ஐந்(து)
ஆண்டு!
ஜோசப் விஜய்:-
விசித்திர ஜந்து
வி.சி.க.வைக்கைக் கூப்பி
வசியமொழி ஆயிரம்
வார்த்தேன்; - பிசிறின்றித்
தந்தார்தம் ஆதரவைத்
தாங்கிய நன்மடலை
இந்தாரும் காண்பீர்
எடுத்து!
விஸ்வநாத் அர்லேகர்:-
பஜாரிலே விற்கும்
பதவியென் றெண்ணி
அஜாக்கிரதை யாய்நீங்கள்
அல்லாமல் - மெஜாரிட்டி
காண்பிக்கத் தந்த
கடிதங் களாலும்மை
ஆண்டுகொள்ள விட்டேன்
அழைப்பு!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக