அப்படியே ஷாக்ஆய்ட்டேன்; ஆறறிவு வீக்ஆய்ட்டேன்;
தெப்பமாய் வேர்த்துடல் சீக்ஆய்ட்டேன்; – இப்படியே
சித்தமெல்லாம் லாக்ஆய்ட்டேன்; சின்னவிழி லீக்ஆய்ட்டேன்;
நத்திநத்தி பேக்ஆய்ட்டேன் நான்!
அப்படியே ஷாக்ஆய்ட்டேன்; ஆறறிவு வீக்ஆய்ட்டேன்;
தெப்பமாய் வேர்த்துடல் சீக்ஆய்ட்டேன்; –
இப்படியோர்
வாய்ப்புக் கிடைத்தும் வழுவவிட்ட
என்மதியை
நாய்க்குப் படையலிட்டேன் நான்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக