வருத்தப் படாதீங்க; வாட்டமுறா தீங்க;
திருவிழியில் நீர்கசியா தீங்க; – ஒருவழியாய்
ஓய்வு கிடைத்ததென்றே ஓரம்உட் காருங்க
சாய்வுநாற் காலியில் சாய்ந்து! 01
நிம்மதியாய் ரெஸ்ட்எடுங்க; நெட்பிளிக்ஸ்
பாருங்க;
அம்மணி யோடளவ ளாவுங்க; – கம்மென்று
பேப்பர் படிங்க; பெருசுகளோ
டும்கதைங்க
தோப்பிளநீர் வாங்கிச் சுவைத்து! 02
காலை டிபன்முடிங்க; காஃபிசூ டாய்க்குடிங்க;
மாலையில் டின்ன(ர்)மற வாதீங்க; – வேலையற்றுப்
போன விசனத்தில் புத்திபிற ழாதீங்க
ஆனமட்டும் பொங்கி அழுது! 03
கேரம்போர் டாடுங்க; ஹேப்பியாய்ப்
பாடுங்க;
நேரத்தில் தூங்கி நிதமெழுங்க; – வாரமெல்லாம்
சன்டிவி பாருங்க; சாங்குகள் கேளுங்க
முன்வினைமேல் பார முரைத்து! 04
அஞ்சரைக் குள்ளவண்டி அந்நாளில்
பார்த்ததெல்லாம்
நெஞ்சத்தின் ஓரம் நினைவிருந்தும் –
கஞ்சனின்
கைப்பொருளாய்த் தேகம் கலவிக் குதவாது
பொய்ப்பொருள்தான் சொந்தமெய்இப் போது! 05
கொஞ்சமா ஆடுனிங்க? கோபத்தில்
சாடுனிங்க?
பஞ்சமா பாதகம் பண்ணினிங்க; – நெஞ்சம்
அறியா லயத்தில் அறிவா லயத்தில்
சிறிய செயல்நூறும் செய்து! 06
சிங்கிளாய் நின்று ஜெயித்தஜோ சப்விஜய்க்கு
அங்கிள்!சொல் லுங்க அகவாழ்த்து; – செங்கதிரை
ஊதி விசிலணைத்த உண்மை உணருங்கால்
பேதிவரக் கூடும் பெரிது! 07
வாயில் இனிமேல் வடைசுடா தீங்க;அந்த
நோயினால் தானே நொடிஞ்சீங்க; - கோயில்போய்ச்
சாமிபா ருங்க; சரணா கதியடைங்க
மாமிபார்க் காதீங்க மாம்ஸ்! 08
நேற்றை நினைந்து நினைந்துருகி ஏற்பட்ட
மாற்றம் பொறுக்கா மனமுடையும்; – தோற்றால்
விபரீத மானபல வெண்ணங்கள் தோன்றும்;
சபரீசா! மாமனார் தாங்கு! 09
வெள்ளியில் பீரோ, வெரைட்டி புடவைகளை
உள்ளிட வாங்கிய உத்தமியே! – தள்ளிப்
படுக்காதே இன்றுனது ‘பாவா’வைத் தூக்கிக்
கொடுக்காதே தூக்குத்தாம் புக்கு! 010
தம்பி உதயநிதி! தந்தை மனமுடைந்து
வெம்பிப்போய் உள்ளார் விசனத்தில்; – கம்பி நீ
நீட்டிச் சரக்கடிக்க நீலாங் கரைஏகாய்;
வாட்டத்தைப் போக்கியுற வாடு! 11
சிட்டிங்சீ யெம்மை, திராவிட ஐகானை,
தட்டித்தூக் கிற்றே தவெக;இக் – கட்டில்
கொணர்ந்து நிறுத்தியதே கோட்டையைப் பற்றிக்
கணக்கைநேர் செய்திக் கணம்! 12
பர்செகண்டுக் கோர்தடவை பந்தா விளம்பரம்,பாழ்;
ஒர்க்அவுட் ஆகவில்லை ஓசிபஸ்; – தற்குறிகள்
என்றிகழ்ந்த ஏச்சுக்கள் எல்லாம்
பொடியாச்சு
நின்றுவிசில் வென்றதனால் நேற்று! 13



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக