ஞாயிறு, 5 ஜூலை, 2026

 

(இஞ்ஞாயிறு...இப்படி...?

 

விசு. இம்மானுவேல்

 

கறிமீனே நீயெங்கே? காணோமே இன்று

பொறிஐந்தும் ஏக்கத்தைப்  பூணச் - செறிவில்லாப்

பையுள்ளே காற்றுண்டு பக்கத்தில் யாருண்டு?

வாயுண்டு வாய்ப்பு வறண்டு...!!

 

அகரம் அமுதன்

 

வாங்கமக்கா இங்கே வகையான பார்ட்டியுண்டு

ஏங்கவைக்கா தெல்லாம் எடுத்தளிப்பேன் - நீங்கமக்கா

ஆளாவந் தாப்போதும் ஆவதநான் பாத்துப்பேன்

மீளாதிவ் வாய்ப்பினி மேல்!

 

விசு. இம்மானுவேல்

 

ஒய்யார பாட்டிலும் ஒத்தாச ஆம்லெட்டும்

பொய்யா விருந்தாச்சே பொன்னாச்சே – அய்யா

விரைவாய்நான் ஓடிவர வீசுபுயற் காற்றா?

திரைபோட்டேன் ஆசையைத் தின்று!

 

அகரம் அமுதன்

 

ஒத்தை யிலக்குடிச்சா ஒட்டாதே இன்னுதான்

செத்தவந்து போங்கன்னு சேவித்தேன்; - மத்தபடி

அய்யாவக் கூப்பிட்(டு) அலையவிட ஆசையில்ல;

கைகோர்ப்போம் நாளை;இன்று கா!

 

விசு. இம்மானுவேல்

 

பழமாகும் காய்விட்டால்; பாவலரே நாளை

அழகாகும் சந்திப்பால் அன்று – வழக்காடித்

தீர்ப்போமே பீருடன் தித்திக்கத் தித்திக்க

வார்ப்போமே வெண்பா வடித்து!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக