உரையாடல்
வெண்பாக்கள்!
அமுதன்
வெண்பாவில் நாமும் விளையாடி
நாளாச்சு;
நண்பாவா! ஏதேனும் நாம்கதைப்போம்;
- முன்போல
நாட்டு நடப்பை, நலிந்தோர்
படுந்துயரைப்
பாட்டில் வடிப்போம் பரிந்து!
(1)
வரதன்
ஓர்பக்கம் பங்கயமும் ஓய்ந்த
விரல்கரமின்
னோர்பக்கம் கொள்ளை உதிப்பதுவாம்
– யார்பக்கம்
சேரும் இலையென்று சேவிக்க
ஈங்கிருவர்
ஊரும் உருப்படுமா ஓர்!
(2)
அமுதன்
விடப்பா அரசியல் வீண்கதைகள்;
கையில்
எடப்பா மனதிற் கினிமை – கொடுக்கும்
அறிவார்ந்த நல்லபல ஆக்கங்கள்
நல்கும்
செறிவார்ந்த செய்திகளைச்
செப்பு! (3)
வரதன்
கல்வி சரியில்லை; காவல் சரியில்லை;
செல்வத் துறையும் சிரிப்பே;
- சொல்நீ!
கனவு கலைத்தின்று காலைப்
பசிக்குன்
உணவுதான் என்ன உரை! (4)
அமுதன்
பழுதுண்ட தெல்லாம்; பகர்ந்துபயன்
இல்லை;
அழுதுண்டே சொல்வேன் அதுகேள்!
– உழுந்துநிறை
இட்டலியை என்மனைவி எட்டு
மணிக்கீந்தாள்
வட்டவட்ட மாக வனைந்து!
(5)
வரதன்
சந்தோசம் ஐயா! சரிஉம் மகன்படிக்க
எந்தஊர்ப் பள்ளி எளிதாகும்?
– சொந்தஊர்ப்
பள்ளியே ஆயினும் பைந்தமிழா?
ஆங்கிலமா?
விள்ளுங்கள் ஐயா விரைந்து!
(6)
அமுதன்
மாட்டிவிட எண்ணி மகன்படிப்பை
என்வாயால்
கேட்டுவிட முன்வைத்தாய் கேள்வியை;
- கேட்டுக்கொள்!
தாய்மொழி கற்றவவன் தந்தை
படும்பாட்டை
நாய்பட்ட துண்டோ நவில்!
(7)
வரதன்
அருமைத் தமிழிருந்தும் அத்தனையும்
குப்பை;
இருபத்தா றெம்கல்வி ஏட்டில்
– உருவெடுத்து
முப்பொழுதும் எங்கெங்கும்
முன்நிற்ப தெல்லாமும்
எப்படியாம் கொஞ்சம் இயம்பு!
(8)
அமுதன்
ஆங்கிலம் ஆட்சிசெய்ய ஆயிரம்
காரணங்கள்
ஈங்குள போழ்தில் எதையுரைக்க?
– பூந்தமிழர்
ஆட்சி புரிய அரியணை இன்மையால்
காட்சிகள் மாறின காண்!
(9)
வரதன்
சரிவிடுங்கள் ஐயா! சகலமும்
கற்று
பெரியவ னாய்ஆனால் பின்னே
– உரியதோர்
வேலைக் கலைந்து விரையங்கள்
ஆகாமல்
நாளைக்குப் பணம்சேர்ப்பான்
நன்று! (10)
அமுதன்
வெல்வர் தமிழர்; வெல்கின்ற
வந்நாளில்
மெல்ல வளர்தமிழ் மீண்டெழும்;
- நல்லதமிழ்
நாக்கில் நடமிடும்; நாட்டில்
வலம்வரும்;
வாக்கிது பொய்க்காது வா!
(11)
வரதன்
வென்றால் நலமே விடுங்களையா!
மற்றிங்கே
இன்றைய செய்தி இருக்கிறது
– நன்றுகேள்
தானியங்கி வாகனத் தாழாத்
துறைநாட்டில்
ஏனிறங்கி விட்டதாம் இன்று?
(12)
அமுதன்
நுட்பமாய் இக்கேள்வி நோக்கப்
படவேண்டும்;
கட்புலனை ஏமாற்றும் காரணங்கள்;
- சட்டம்
இறுகுவதால் கூட இருக்கலாம்;அவ்
வீழ்ச்சி
சிறுதொழில் வீழ்வாலும் தேர்!
(13)
வரதன்
பாரத் புகைவிதி நான்கினைப்
பாவமிந்த
ஊரதுவும் ஆறாக்க உள்வாடி
– நேரதற்கும்
இன்றி அதற்காக ஏனிந்த நட்டங்கள்
மின்கல வாகனமா மேல்?
(14)
அமுதன்
மின்னால் இயங்கும் மிடுக்கான
வாகனங்கள்
தன்னாலே மாசைத் தடுக்கலாம்;
- கன்னெய்யால்
ஓடுகிற வண்டிகளோ டொப்பிட்டுப்
பார்க்குங்கால்
கூடும் செலவும் குறைவு!
(15)
வரதன்
பழகிய ஒன்றை படிப்படியாய்
மாற்ற
அழகிய தீர்வும் அமையும்;
- வழக்கத்தைப்
பட்டென் றொழித்தால் பணக்காரர்
மட்டுந்தான்
இட்டபடி வாழ்வார் இசைந்து!
(16)
அமுதன்
தீக்குள்கை விட்டால் திடுக்கிட்
டிழுக்காமல்
போக்கிலே விட்டாபின் போயிழுப்பாய்?
– நோய்க்குறி
கண்டவன் முன்புபோல் கண்டதையும்
செய்வானேல்
கொண்டநோய் தீருமோ கூறு!
(17)
வரதன்
மொழிந்ததெல்லாம் ஐயா முழுவுண்மை;
ஆனால்
தொழிலாளர்க் கெல்லாம் துயர்தான்
– வழியேதும்
உண்டென்று சொல்ல உயர்வழிகள்
இல்லையிதைக்
கண்டெங்கு போவார் கடந்து?
(18)
அமுதன்
பாதிப்ப தெல்லாம் பணியாளர்
தானென்று
சாதிப்ப தெல்லாம் சரியேதான்;
- யோசித்தால்
தற்கா லிகமான தாகும் பணிநீக்கம்;
அற்றுவிடும் அல்லல் அது!
(19)
வரதன்
உப்புக்கும் இங்கே உழல்பவரைப்
பாராமல்
குப்பை கிளரிவரும் கோமாளிக்
– கெப்பொழுதும்
மண்ணலமே இல்லையெனத் தான்நானும்
அஞ்சுகிறேன்
இன்னிலையைக் கண்டு இடிந்து!
(20)
அமுதன்
எடுப்பார்கைப் பிள்ளை எனவான
கேடன்
கெடுத்த பணமதிப்பின் கேடால்
– அடுத்தடுத்து
நாட்டில் சிறுதொழில்கள் நாசமாய்ப்
போனதைத்தான்
ஏட்டில் படிக்கிறோம் இன்று!
(21)
வரதன்
மந்தநிலை என்று மடல்மடலாய்ச்
செய்தியெல்லாம்
வந்தவண்ணம் கண்டு வருந்துகிறேன்
– பிந்தியுள்ள
வங்கம்நே பாளமெல்லாம் வானைத்
தொடுகிறதே
பங்கமையா இங்கிவரால் பார்!
(22)
அமுதன்
சீவிச் சிணுக்கெடுத்து சிம்மா
சனமேற்றிக்
காவிகளை ஆளவிட்ட காரணத்தால்
– ஓவிய
நாட்டை உருக்குலைத்தார்;
நாயினும் கீழிவர்தம்
சேட்டைக் களவில்லை சீ!
(23)
வரதன்
முறைதவறி ஆளுகிற முட்டாளைக்
கூர்சொல்
உறைவாளால் வீசி உடைத்தாய்;
- நிறைவாக
மண்ணாளு கின்ற மறுபொறுப்பு
கைசேர்ந்தால்
என்னென்ன செய்வாய் இயம்பு?
(24)
அமுதன்
சட்டங்கள் யார்க்கும் சமமென்
றுறுதிசெய்வேன்
திட்டத்தில் ஊழலெனில் தீயாவேன்;
- கிட்டத்தில்
மக்களை நாடி மகிழ்ச்சியில்
ஆழ்த்துவேன்
சிக்கல்கள் யாவையும் தீர்த்து!
(25)
வரதன்
சட்டங்கள் யார்க்குஞ் சமமே;
அதற்குமேல்
கொட்டம் அடங்காக் கொடியவர்
– திட்டமிட்டுத்
தான்வளர வேண்டித் தனித்திட்டத்
தால்கவிழ்ப்பார்
ஏன்என்றால் இங்கவர்சொல் ஈறு!(26)
அமுதன்
வஞ்சகரைத் தேடி வகிர்வேன்;
கரம்பற்றிக்
கெஞ்சிடினும் நெஞ்சைக் கிழித்தெறிவேன்;
- கொஞ்சுதமிழ்
மக்களுக்காய்ச் சாவையும்
வாரி அணைப்பேன்நான்
குக்கலுக்கா அஞ்சுவேன் கூறு!
(27)
வரதன்
வந்தாலும் சாதி வளரும்; சிறப்பாட்சித்
தந்தாலும் லஞ்சம் தலைதூக்கு
– இந்தநிலை
ஊர்விளைந்து நிற்க ஒழிக்கஒரு
நல்வழியை
ஓர்வரியில் சொல்வீர் உணர்ந்து!
(28)
அமுதன்
ஓர்வரியில் சொல்ல உகந்த பதிலைநான்
நேர்வழியில் பேச நினைக்கின்றேன்
– சீர்கெடுக்கும்
கையூட்டைச் சாதியைக் கைக்கொண்டால்
தூக்கிலே
மெய்யூட்டிக் கொல்வேன் மிதித்து!
(29)
வரதன்
இப்பொழுதே ஆள இறங்கிவிட்டாய்;
கற்பனையில்
துப்பறிந்தே கள்வரைத் தூக்கிலிட்டாய்
– முப்பொழுதும்
மெய்ந்நெறியைத் தாரும் மிசைமொழியாம்
நாம்பேசும்
பைந்தமிழ்க்கென் செய்வாய்
பகர்? (30)
அமுதன்
என்னாட்சிக் குட்பட்ட எல்லாத்
துறையிலும்
நின்றாட்சி செய்யும் நிறைதமிழை
– நன்றாய்ப்
படிப்பார்க்கே வேலை; பகர்வார்க்கே
மேடை;
படைப்பார்க்கே ஆட்சிப் பணி!
(31)
வரதன்
அனைத்துமென் றாலே அறநிலையும்
தானே
இணைத்துள்ளீர்? ஐயா இனிமேல்
– கணைதமிழில்
மட்டுமே கோயில் மறையோது வாரென்ற
சட்டமே உண்டன்றோ? சாற்று!
(32)
அமுதன்
செத்த மொழியால் தினம்தீட்டுப்
பட்டுத்தம்
சித்தம் கலங்கும் சிவன்திருமால்
– ‘முத்தமிழைக்
காதுற்றே தீட்டு கழிந்தனம்’
என்பாரேல்
ஏதுநான் சொல்ல இனி? (33)
வரதன்
வண்டமிழில் ஓத வருவான் இறைவனெனும்
எண்ணம் எனக்குள் இசைகிறது
– மண்ணிலினிக்
கல்லென்ற தெய்வமெல்லாம் கண்முன்னே
தோன்றஅதை
இல்லையென்போர் என்செய்வார்
இங்கு? (34)
அமுதன்
ஊரோடு மட்டும் உபதேசம் செய்துவந்த
ஈரோட்டார் கூட்டம் இனிமேலே
– போராட்டம்
கைவிட்டுத் தாம்மணந்த காரிகையார்
தங்களுடன்
செய்விப்பார் பூசை தினம்!
(35)
வரதன்
சீர்தமிழில் ஓதல் சிறப்பே;
மறைதன்னை
யார்தமிழில் ஓதலாம் இங்கேசொல்
– பார்முழுதும்
நூலணிந்தா ருக்கே முதலிடமாம்
நம்மையெல்லாம்
காலணியாய்க் கொள்கின்றார்
கண்டு! (36)
அமுதன்
உள்ளே தமிழ்மொழியில் ஒண்டமிழன்
தெய்வத்திற்(கு)
அள்ளி மலர்தூவி அர்ச்சிப்பான்
– தள்ளி
வெளிப்பக்கம் நின்றபடி வேண்டுவான்
பூணூல்
மலிந்ததோள் பாப்பான் மருண்டு!
(37)
வரதன்
சாமி’யார்’? தோன்றும் சரிதான்;
பலபோலிச்
சாமியார் இங்கே சரியில்லை
– சாமியாய்த்
தண்டந் தருமோ? தகுந்த வழியேதும்
உண்டோ உனதிடத்தில் ஓது!
(38)
அமுதன்
மக்களை ஏமாற்றும் மாபா தகஞ்செய்யும்
அக்கலையில் தேர்ந்த அடியாரைத்
– தக்கணமே
துண்டுதுண்டாய் வெட்டித்
தொழுவத்துப் பன்னிகள்
உண்ண இடுவேன் உவந்து!
(39)
வரதன்
எதைவெட்டு வாயோ இயம்பவில்லை
நானும்
அதைவெட்டு வாயென் றறிவேன்
– அதைவெட்டித்
துண்டாக்கிச் சாய்த்துந்
தொடர்ந்திங்கு வன்புணருஞ்
சண்டாளர்க் கோர்முடிவைச்
சாற்று! (40)
அமுதன்
வன்புணர்வுக் கெல்லாம் வழக்கென்ப
தில்லை;பின்
என்னதான் தண்டனை என்பாயேல்
– வன்புணர்ந்தோன்
ஆணுறுப்பைத் தூக்கினில் அப்போதே
போடுவேன்
வீணுறுப் பென்றே விதித்து!
(41)
வரதன்
கற்பழித்தால் அங்கே கடுங்குற்றம்;
மற்றங்குப்
பொற்களவுக் காய்விலங்கு பூட்டிடலாம்
– வற்றியவன்
உண்ணும் உணவுக்காய் ஓர்நாள்
திருடிவிடின்
என்னதான் செய்வீர் இதை!
(42)
அமுதன்
காய்ந்த வயிறு களவுதான் செய்திடும்;
பாய்ந்து வழிப்பறி பண்ணிடும்
– ஆய்ந்துநான்
உண்ணும் உணவை உதவா தொளிப்பார்க்கே
தண்டனை ஈவேன் தளைத்து!
(43)
வரதன்
மும்மதம் அல்லாமல் முந்நூ
றிருந்தாலும்
அம்மதங்கள் ஒன்றா அமுதா!கேள்!
– எம்மதத்தார்
பின்னேவா என்ற பிரச்சாரம்
மேலோங்க
என்செய்வாய் நாளை இயம்பு?
(44)
அமுதன்
மார்க்கத்தின் பேரால் மனிதர்
பிரிவாரேல்
தார்க்குச்சி யால்முதுகில்
சாத்துவேன் – மார்க்கங்கள்
ஆற்றுப் படுத்தத்தான்; ஆள்சேர்க்க
இல்லையிதை
ஏற்றால்தான் நாட்டில் இடம்!
(45)
வரதன்
திக்கெட்டுஞ் சட்டம் திணித்திடினும்
மேலோங்கும்
மக்கட் தொகைக்கோர் மடையின்றி
– முக்கிமுக்கித்
தேக்கமின்றிப் பெற்றுத் தெருநடக்கப்
பாதையில்லை
சீக்கிரமோர் நல்வழியைச் செப்பு!
(46)
அமுதன்
ஒன்றின்மேற் பெற்றால் உரிமை
பறிபோகும்
என்ற நடைமுறை ஏற்படுத்தி
– அன்றுமுதல்
பெண்களும் ஆண்களைப்போல் பெற்றோரைப்
பேணுரிமை
உண்டென்பேன் சட்டம் உரைத்து! (47)
வரதன்
இன்னும் வினாக்கள் இருக்கிறது;
கேட்கின்றேன்
எண்ணும் பதிலை எடுத்துச்சொல்;
- கண்முன்னம்
நேர்முகத் தேர்வாய் நினைக்காதே;
நட்பென்னும்
ஓர்முகம் தானென் றுணர்!
(48)
அமுதன்
கேட்டால் பதில்கிடைக்கும்;
கேட்கும் மனநிலை
வேட்டால் வினாபிறக்கும்;
வேறென்ன? – பாட்டாலே
வேள்வி நடாத்து; விருப்பமுடன்
ஒவ்வொன்றாய்க்
கேள்வி எதுவெனினும் கேள்!
(49)
வரதன்
அடப்பாவி என்றிங் கனைவருமே
ஏசும்
எடப்பாடிக் கோர்விருதாம்
இங்கே – அட!மழைக்கும்
பள்ளி ஒதுங்காத பாவிக்குப்
பட்டத்தை
அள்ளித் தருவதா ஆங்கு?
(50)
அமுதன்
கொள்ளத் தகுந்த குமரியைக்
கொன்றுவிட்டுத்
தள்ளத் தகுந்தாரைத் தாங்குகிறார்;
- உள்ளபடி
வந்து கொடுப்பார்க்கும் வாங்க
விழைவார்க்கும்
சிந்தையில் மண்டியது சீழ்!
(51)
வரதன்
நாய்ப்பட்ட பாடாய் நடந்தே
இளைத்தார்கள்
நோய்ப்பட்ட ஏழைகள்; நுட்பமிது;
– பாய்படுக்கும்
இல்லாருக் கொன்றும் இருப்பவர்க்
கொன்றுமாய்ச்
செல்லாத வைத்தியமா? சீ!
(52)
அமுதன்
நாட்டில் மருத்துவம் நானாளும்
நாட்களில்
காட்டும் எவர்க்கும் கருணையே
– நீட்டும்
பணத்திற்காய் அங்கே பணிவிடை
செய்யா(து)
அனைவர்க்கு மான தது! (53)
வரதன்
வடக்கத்திக் கூட்ட வருகை
பொசுக்கி
அடக்கும்தீ வேண்டும் அமுதா!
– நடக்கின்ற
வேலையெல்லாம் பார்த்தால்
வெறும்விரலைச் சப்பவிட்டு
நாளையாள்வார் போலும் நமை!
(54)
அமுதன்
எல்லாப் பணியிடமும் எங்கள்
தமிழர்க்கே
யல்லால் அயலார்க் களிப்பதில்லை
– நல்லபடி
சொந்தஊர் போய்விடச் சொல்வேன்;
அவர்க்கில்லை
இந்தஊர் தன்னில் இடம்!
(55)
வரதன்
ஆழநிலந் தோண்டி அழகுத் தமிழ்மரபைக்
கீழடியில் காணக் கிளம்பிவிட்டோம்;
- ஊழலால்
தோன்றிய கும்பலெல்லாம் தொன்மைத்
திராவிடமென்(று)
ஊன்றி உரைப்பதேன் ஓது?
(56)
அமுதன்
வந்தேறி யான வடுகன் திராவிடன்;
செந்தமிழன் என்றென்றும் செந்தமிழன்;
- இந்தஉண்மை
கீழடி ஆய்வில் கிடைத்தால்
விடுவானா?
கீழறுக்கப் போந்தான் கிளர்ந்து! (57)
வரதன்
பள்ளம் நிறைந்திருக்கப் பார்க்கின்ற
சாலையெல்லாம்
துள்ளுந்துக் காரனையே தூற்றுகின்றார்
– துள்ளுந்தைத்
தள்ளிப்போ இன்றேல் தலைக்கவசம்
மாட்டென்று
சொல்ல உரிமையுண்டோ சொல்!
(58)
அமுதன்
சாமா னியனின் தலையில் மிளகறைக்கும்
பேமா னிகளின் பிழையிது;
- நாமாண்டால்
மெச்சும் படிச்சாலை மேம்படுத்திப்
பின்கவசம்
நச்சென் றிடச்சொல்வேன் நான்!
(59)
வரதன்
நாட்டில் எதிர்க்கட்சி நம்மக்கள்
வாகளித்துக்
கோட்டையை ஆட்சி கொளும்கட்சி
– கூட்டுணர்வே
ஒவ்வா திருப்பதோ? ஒன்றுதல்
தான்சரியோ?
எவ்வா றிருந்திடணும் இங்கு?
(60)
அமுதன்
அறம்பிற ழாதநல் ஆட்சியை ஆள்வோர்
திறமுடன் செய்தல் திருவாம்;
- அறத்திற்
சிதிலம் சிறிதும் திகழ்ந்தால்
உரைத்தல்
எதிர்க்கட்சிக் கென்றும்
எழில்! (61)
வரதன்
கேள்விக் கணையெதிர்த்த கேடயம்நீ
ஆட்சியெனும்
வேள்வி நடத்த விடியல்தான்
– கோள்விளங்கும்
நாட்டில் முதலிடமாய் நம்நாடும்
மேல்வளர
கோட்டைக்குச் செல்வாய் குறித்து!
(62)
அமுதன்
ஆட்சி நமதாட்சி யானால் தமிழணங்கின்
மீட்சி உறுதி மிகையில்லை
– மாட்சியுடன்
வையத் தரங்கில் மதிக்கப்
படுவர்நம்
செய்யத் தமிழர் சிறந்து!
(63)
வரதன்
நன்கு தமிழ்படிக்க நாலடியார்;
வீரமுன்னில்
மங்கா திருக்க பரணியே; -
பொங்கி
வதையழித்தே நாட்டை வளர்ச்சியுறச்
செய்வார்
இதைப்படிக்கும் மாந்தர் இனி!
(64)
வரதன்
பொற்றொடியார் எண்ணம் புரிந்தளித்தீர்;
நாட்டின்மேல்
பற்றில்லார் எல்லாம் மருத்துவராய்ப்
– பெற்றிருக்கும்
பட்டத்தைப் பார்த்தாலே பள்ளிக்கல்
லூரியெல்லாம்
விட்டொழிப்பார் போலும் விரைந்து!
(40)
அமுதன்
பட்டங்கள் வாங்கப் பணத்தைப்
பதவியை
இட்டம்போல் இங்கே இயக்குவார்
– கொட்டம்
அடங்க அடிப்பேன்; அடங்காத
பேரின்
தடங்கை ஒடிப்பேன் தகைந்து!
(41)
அமுதன்
இதனை இதனால் இவன்முடிக்கும்
என்றாய்ந்
ததனை அவன்கண் விடலென் – பதனால்
தலைவனாய் உன்னைத் தமிழ்த்துறைக்
கீவேன்;
நிலைதமிழுக் கென்செய்வாய்
நீ?
வரதன்
வேட்ட தமிழன்றி வேறுமொழி
பேசிடஅந்
நாட்டிற்கே செல்லென்று நானுரைப்பேன்;
- காட்டாய்நா
ஏந்தித் தெலுங்கால் ‘எனக்குணவு
வேண்டு’மென்றால்
ஆந்திரா செல்லென்பேன் ஆம்!
அமுதன்
பகைவரும் நாடிப் பசுந்தமிழ்
கற்கும்
வகையினில் நீயோர் வழிகாண்
– தொகைதொகையாய்
நாடு கடத்துவதா நல்லாட்சி?
உன்செயலால்
ஏடு பழிக்கும் எனை!
வரதன்
நாடு புகழ்வதாய் நாமாள வேண்டுமெனில்
வீடுவாசல் எல்லாமும் விற்கவேண்டும்
– காடுகளில்
நால்மரங்கள் தாவுகுணம் நம்மக்கள்;
ஆடுமையா
கோல்எடுத்தால் தானே குரங்கு?
அமுதன்
குரங்கென் பதுவா குடிகளை?
பூவைச்
சிரங்கென் பதுவா செடிக்கே?
– வரம்பற்ற
செல்வேண்டாம்; தொண்டு செயல்வேண்டும்;
புண்செய்யும்
கல்வேண்டாம்; வேண்டும்கற்
கண்டு!
வரதன்
எண்ணோடு கையெழுத்தும் என்தமிழே;
செய்யாரைக்
கண்ட உடன்செய்வேன் கைதும்நான்;
- பின்நாளில்
செந்தமிழில் பேரிலையேல் சேர்ப்பதில்லை
பள்ளியிலும்
குந்தஉரி மைபறிப்பேன் கூர்ந்து!
அமுதன்
கண்பட்ட தால்நீ கழிக்கின்றாய்
கண்ணேறு;
பண்பட்ட உன்பணிக்கென் பாராட்டு;
- பண்படுத்தும்
ஆணையை ஏற்பர் அருந்தமிழர்;
நல்லிசைசெய்
வீணையை ஏற்கும் விரல்!
உமா ரமேஷ்
ஆட்சி எனதாட்சி என்றானால்
அந்நாளில்
வீட்டுக் கழிவெல்லாம் வீதியிலே
வீசுவோரை
நீட்டுன் கரமென்று நீள்கொம்பால்
நான்கடி
போட்டுப் புரியவைப்பேன் பார்!
அமுதன்
தடியடியால் தோன்றிவிடும்
சச்சரவு; - நாட்டில்
அடிதடியால் முன்னேற்றம் ஆகா(து)
– உடனடியாய்த்
திட்டம் சரியாகத் தீட்டிவிட்டு
நாம்போடும்
சட்டம்தான் நன்மை தரும்!
உமா ரமேஷ்
திட்டங்கள் தந்தாலும் சட்டங்கள்
போட்டாலும்
எட்டா மனத்தினில் எள்ளளவும்
மாற்றமில்லை
கொட்டிக் கெடுத்திடுவார்
குப்பையை நாற்சந்தில்;
தட்டிச் சரிசெய்தா லென்?
அமுதன்
கேளாரை மன்றிற் கிழுத்துவந்து
தண்டிப்போம்
ஆளாரையும் தாக்கல் அவசியமா?
– நீளாத
கைவேண்டும் நீண்டால் கலங்குவார்
கண்துடைக்கும்
கைவேண்டும் என்பேன் கனிந்து!
எழுந்த உடன்நீர் இருகோப்பை
உண்டேன்
கொழுந்துவிடுஞ் சூடு குறைக்க
– உழுந்துநிறை
இட்டலியை என்மனைவி எட்டு
மணிக்கீந்தாள்
சட்டினியும் சாம்பாரும் தான்!
(5)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக