ஞாயிறு, 5 ஜூலை, 2026

மே 8 2020

 

அமுதன்:-

அஞ்சுவட்டிக் கும்வாங்கி அந்தப்பெண் ணைச்சேர்வேன்;

கொஞ்சநஞ்சப் பேரழகா கூர்மார்பு? - இஞ்சியிஞ்சாய்

மேலுதட்டால் ஓர் முறையும் கீழுதட்டால் ஓர் முறையும்

தோலுடுத்த மாரளப்பேன் தொட்டு!

 

ஏடி வரதராசன்:-

காணென்று காட்டக் கருத்தயிதழ் முத்தமிட்டுத்

தேனெடுத்து மட்டும் திரும்பிவா ---- ஏனென்றால்

பத்துவட்டிக் கும்வாங்கிப் பார்ப்பேன்பின்; உன்வாய்ப்பல்

குத்திவிட்டால் ஆமே குறை!

 

அமுதன்:-

பத்துவட்டிக் கும்வாங்கிப் பாயில் இடம்கேட்டால்

ஒத்துக்கொள் ளாளந்த ஒண்டொடி; - வித்தகன்என்

ஆட்டத்தைக் கண்டால் அடுத்தோர் இடம்நாடும்

நாட்டம் எழுமோ? நவில்!

 

ஏடி வரதராசன்:-

யாராட்டம் வேண்டாமல் இங்குவந்து சேர்ந்தாளென்(று)

ஓராமல் இங்கே உளராதே -- ஊரான்

கடைவந்த தெல்லாம் கணக்கிட்டால் நாமும்

விடையில்லா பாய்மேல் வினா.

 

அமுதன்:-

கலைமகள் காணந்தக் காரிகை; நீயோ

விலைமகள் என்பது வீணே; - முலைமகள்

நிற்கும் வியப்புக் குறியாம்; வினாவென்ற

தற்குறி உன்சொல் தவறு!

 

மே 8 2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக