இப்படிக்கா கொரோனா
இன்னுங்கொஞ்சம் நீளாதா?
அப்படிக்கா நிவாரணம்
அன்றாடம் வாராதா?
காலம்போன காலத்துல
காயம்ஓஞ்ச நேரத்துல
ஒக்காந்து நாந்திங்க
ஒதவிவந்து சேராதா?
கட்டுனவன் போயாச்சி
பெத்தஒன்னும் பேயாச்சி
கொட்டுறதேள் நோயாச்சி
கொடும்பசிஎன் பாயாச்சி
தாகத்துக்குத் தானேதண்ணி?
சாப்பாடா எனக்காச்சு!
சாப்பாடா ஆனதால
தாகம்காணாப் போயேபோச்சு!
இப்படி நாஞ்சிரிச்சி
இரண்டொன்னு ஆண்டிருக்கும்...
இப்படியா வறுமைக்கு
எம்மேல காண்டிருக்கும்?
நாலுநோட்டு கொடுத்தீக
நாலுவாரம் நாம்பொழைக்க...
ஊர்சாமி வேண்டிக்கிறேன்
ஒம்மோட கொலந்தழைக்க...
வரதன் :-
பாட்டி மனசப் பளபளன்னு காட்டிட்ட
கூட்டிவச்சி வார்த்த குவிச்சிட்ட --
பாட்டியப்போல்
அந்த அமுதனும் வாங்கிருந்தா
ஒண்ணுமட்டும்
தந்துட்டு போனான்ன தப்பு?
அகரம் அமுதன் :-
தப்பில்ல ஒண்ணு தரலாந்தான்; வீட்டுல
உப்பில்ல வாங்க ஒருநோட்டு; - சப்புள்ள
காய்க்கும் கறிக்கும் கணக்கா இரண்டுபோக
வாய்'சரக்கிற்' கொன்றிருக்கு வா!
வரதன் :-
வந்தா சரக்குமட்டும் வாங்கிடுவ; சைட்டிஸ்சும்
தந்தா அடிப்பேன் தருவியா -- இந்த
வடையோட சிப்சு வகையெல்லாம் வேணாம்
தொடக்கறி சாந்துதான் தூள்.
அகரம் அமுதன் :-
இதுகூடச் செய்யேனா? என்னென்ன வேணும்?
எதுன்னாலும் கேட்டால் எளிதில் - அதுவாங்கி
நான்தர நீபெற நட்பின் அடையாளம்
நான்நீ எனுமிவ்வூர் நன்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக