சனி, 11 ஜூலை, 2026

 

பல்லவி:-

 

பெண்:-

நீதான் என் செல்லக் குட்டி!

நான்தான் உன் வெல்லக் கட்டி!

காலங்கள் தோறும் - உன்

உறவா? - நான் வரவா?

 

ஆண்:-

அடங்காத காள மாடு!

ஆனதே பிடி மாடு!

வேறொன்னும் வேணாம் - உன்

துணையா - நான் வரவா?

 

பெண்:-

எனக்கெனக் கிடைச்சவன் - உனை

அனுப்பினான் படைச்சவன்...

 

ஆண்:-

உனக்கெனக் கிடைச்சவன் - எனை

அனுப்பினான் படைச்சவன்...

 

சரணம்:- 1

 

ஆண்-

பாராயணம் பண்ணுறேன் உன்

பேர... பேர...

பார்க்காமலே போவதேன் உன்

காதல் பார்வ...

 

பெண்-

வண்டுக்குப் பூவை விட்டா

வசதிவே றுள்ளதா?

நண்டுக்கு வளையை விட்டா

நடுரோடு நல்லதா?

 

ஆண்:-

என் வாழ்க்கை முன் அழுகாச்சி

உன் வரவால் இன்றழ காச்சு...

 

சரணம்:- 2

 

பெண்:-

ஆராரிரோ பாடவே அட

ஆச... ஆச

அச்சச்சத்தான் மூட்டுதே உன்

முறுக்கு மிச...

 

ஆண்:-

பொழுதான பின்னே நிலவு

வாராமல் போகுமா?

இரண்டறக் கலந்தி டாமல்

என்கட்டை வேகுமா?

 

பெண்:-

காதலைக் கண்ணில் காட்டி

காதில்சொல் இன்னொரு வாட்டி...

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக