பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
எட்டிக் காய் பற்றி இழுத்துச் சுவைக்காமல் எட்டிக்காய் என்றே இகழ்வேனோ? - எட்டிக்காய் கின்றமதி இன்முகத்தாய்! கேளாய்! உனதிரண்டு நின்றமுலை தெங்கிள நீர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக