ஞாயிறு, 5 ஜூலை, 2026

1 ஜூலை, 2021

 

வரதன்:-

அண்ணாந்துப் பாத்தே அளந்திருக்கேன் சூரியனை

கண்ணேதும் ஆகல்ல கண்மணியே -- சின்னவிழி

ஒன்னமட்டும் பாத்தா ஒடம்பெல்லாங் கூசுதுன்னுக்

கண்ணாடி போட்டிருக்கேன்  காண்.

 

அகரம் அமுதன்:-

ரோட்டுல போமுடில; லோலோன்னு பின்னாடி

ஆட்டினு வந்துடுறான் ஆணழகன்; - நீட்டுல

பாஸானா மட்டும்லௌவ் பண்லான்னு லாவந்தா

லூஸாவான் பாய்ஸ்பல பேர்!

 

வரதன்:-

நீட்டுல பாசானா நீயெல்லாம் பொண்ணுன்னு

ரோட்டுலயா சுத்துவேன் ரோந்துக்கு ? -- ஹாட்டில்லா

ஏசிகார் உள்ள  எனக்கான ஏஞ்சலோட

பேசிட்டே போவேன் பிறகு.

 

அகரம் அமுதன்:-

'ஒன்ஸ்'போகக் கூட ஒழுங்கா அறியாநீ

பென்ஸ்ஸுல போவியா பெண்கூட? - என்னழகுக்(கு)

ஊராளும் மன்னவன் ஓடிவந்து பெண்கேட்பான்

தாராள மாகப்பொன் தந்து!

 

1 ஜூலை, 2021 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக