புதன், 1 ஏப்ரல், 2026

பிரபாகரன்!

 பிரபாகரன்!

தலைவன் பிறந்தான்; தமிழன் நிமிர்ந்தான்;
தலைவன் வரவால் தமிழும்; - தலைவன்
இறவாய்ப்* பகைவர்க் கெழுந்தான்; அவனே
இறவாப் புகழின் இருப்பு!
சொற்பொருள் :-
இறவு + ஆய் - பகைவர்க்கு மரணமாகவே தோன்றினான் என்பதாம்.

குடல்சூழ் வயிற்றில் குதித்துத் தமிழர்
இடர்சூழ் இனத்தில் எழுந்தான்; - கடல்சூழ்
நிலத்தில் படைகள் நிறுவிப் பெயர்ந்தார்*
புலத்தில் அடைந்தான் புகழ்!
சொற்பொருள்:-
பெயர்ந்தார் புலத்தில் - புலம் பெயர்ந்தார் இடத்தும் புகழடைந்தான் என்பதாம்.

இழுக்கம் உடையார்க் கிடந்தர மாட்டான்;
ஒழுக்கம் அவனின் உயிராம்; - புழுக்கம்*
அடைவான் பகைவன்; அரிதா னவனின்
நடைவான் புகழும் நனி!
சொற்பொருள்:-
புழுக்கம் - பகைவனும் இவன் ஒழுக்கம் கண்டு பொறாமை அடைவான் என்பதாம்.

கதிரவன் சிங்களர் கண்டு வியக்கும்
புதிரவன் கண்ட பொழுதில் - எதிர்க்கும்
தடைகள் தகர்த்துத் தரணி கடக்கும்
படைகள் நகரும் பணிந்து!

மதியென் றுனைநான் மதிப்பிட மாட்டேன்;
மதிவரும் போகும் அதுபோல் – கதிரென
மோனை தமிழில் முழங்கிடேன்; மன்னிய
வானை நிகர்த்ததுன் மாண்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக