ஜென்சி திமுக வெண்பா!
ஆண்ட திமுக அடம்பிடித்து ஜென்சிகளைத்
தூண்டி இழுக்கத் துணிந்ததுவே –
வாண்டுகளின்
மாஸ்அறிந்து கொள்ளா மடமையி னாலடைந்த
லாஸ்அறிந்து கொண்டங்க லாய்த்து!
நடிகனின் பின்னால் நடைபோடு வார்தம்
அடிகளைக்கண் ணீரால் அலம்பிப் –
பிடித்திழுக்க
ஜென்சியை முன்னொட்டாய்ச் சேர்க்க முனைந்ததெல்லாம்
முன்னேற்றம் அல்ல; முடிவு!
கொத்தடிமை என்பதனைக் கொத்தூஸ்
எனும்புதுமை
சத்தியமாய்க் காணச் சகிக்கவில்லை; - இத்தகைய
சொல்லால் தனைத்தானே சுட்டல் மடமைஇதைக்
கல்லி எறிதல் கடன்!
மூத்த வயதுடைய முட்டாள்கள் சூழ்ந்துளதால்
காத்துமிக வாங்குகிற கட்சியதை –
நீத்தார்தம்
பட்டியல் சேர்த்தல் பகுத்தறிவு; ஜென்சிகள்முன்
குட்டிக் கரணமிடல் கூத்து!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக