எனக்குள்
அவள்!
பூமேல
வண்டமர்ந்தாற் போலஅவள் நெனப்பு – என்
புத்திக்குள்ள
படமோட்டும் பொன்முகத்து வனப்பு!
தேனள்ளித்
தெளிக்குமவள் தெத்துப்பல் சிரிப்பு – இள
மான்துள்ளிக்
குதிப்பதுபோல் வார்த்தைகளின் விரிப்பு!
அவள்வீட்டுக்
கதவுக்கும் கண்முளைக்கும் புதுமை
அடஅந்தப்
புதுமைக்குக் காரணம் அப்பதுமை!
காற்றாகப்
பறக்குமவள் கால்தடத்தைத் தேடி – ஒரு
கற்பூரம்
ஏற்றலன்னா மனம்போகும் வாடி!
அவள்தொட்ட
காகிதப்பூ மணம்வீசும் வீசும் – அட
அதைக்கண்டு
பொறுக்காம அல்லிபுறம் பேசும்!
என்னுதட்டில்
ஓடுது ஒருமுத்த ஆறு – அதில்
உள்நீச்சல்
அடிக்கஅவள் உதடுகொள்ளும் வீறு!
பல்குத்த
அவளுக்கென் மீசைநுனி தோது – அவ
ஆசைகளை
மாட்டிவைக்கும ஆங்கர்என் காது
வாடையது
மடல்திறந்து வாசமள்ளித் தெளிக்க – உடன்
தேடியங்கு
வண்டுவந்து தேன்கடலில் குளிக்க…
அவநெனப்பு
வந்துவந்து ஆனைவெடி வெடிக்க – தெனம்
சிவனேன்னு
இருப்பதுபோல் எப்படிநான் நடிக்க?
போல்லாத
கடவுள்ஏன் பொம்பளைய படைச்சான் – அவ
இல்லாத
இடையின்மேல் இன்பத்த வைச்சான்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக