பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
பன்னுக்குப் பாவெழுத பட்டினியில் வாடவில்லை
ஃபன்னுக்குப் பாவெழுதும் பாவலன்நான்; - ஜின்னுக்கோ
ரம்முக்கோ பாடும் ரகமில்லை; கோல்டுபில்டர்
தம்முக்கே பாடா தவன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக