சும்மாவே ஆடுவ; சூப்பராப் பாடுவ;
அம்மாடி! மேடைன்னா அவ்ளோதான்; – நம்மாள்கள்
காதில் கவிச்சாறு காய்ச்சுவ; எங்கிட்ட
ஈடில்லா அச்சாற்றை ஈ!
படிச்சித்தான் பாக்குறனே; பாயாசம் போலக்
குடிச்சித்தான் பாக்குறனே; கொண்டா! – மடிச்சிதான்
பைலவெக் காத; பயித்தியமா ஆக்காத;
கைலதா! தர்லேன்னா கா!
எங்கத் தொடங்குவ எங்க முடிப்பன்னு
இங்கெனக்கே கூடத் தெரியாதே; – அங்கிருக்கும்
ஆளுகளை எல்லாம் அசத்தி இருப்பியே
தோளு களையெல்லாம் தொட்டு!
கள்காய்ச்சக் கூடாது கம்பா! தெரியாதா?
கள்காய்ச்சி வித்ததாக் கைதிபண்ணி – உள்ளதள்ள
தெம்பாப்போ லீஸ்வாரான்; தேடியும்நீ கிட்டலன்னு
தம்பி எனைத்தூக்கத் தான்!
பட்டப் பகலுல பட்டாசு போட்டியாம்;*
பொட்டுவெடிக் குன்னோடு போட்டியாம்; - எட்டநின்னு
பாத்துவந்த பூங்காத்துப் பாத்தபடி சொல்லுச்சு
சேத்துவந்த தூறலோடு சேந்து!
போட்டியாம் – போட்டாயாம் என்பதன் பேச்சு
வழக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக