ஒருதலை பெற்றும்
ஒழுங்காய் இராது
தருதலை என்றபேர்
தாங்கித் - தெருதலை
சுற்றித் திரிந்து
வெற்றுப் பயலானேன்
வீண்!
அறுதலை நாயகா!
அப்பா!என் பாவம்
அறுதலை வேண்டி
அணைந்தேன்; - பெறுதலைப்
பெற்றபின் நின்றன்
பெயர்மறப் பேனென்று
சற்றும் கருதாமல்
தா!
போதக்கால் நீயென்று
புந்தியில் ஏற்றுன்றன்
சீதக்கால் மீது
சிரம்வைத்தேன்; - ஓதக்கால்
சோதரா! நேக்குச்
சுகந்தரா விட்டாலும்
சோதரா மற்காப்பாத்
து!
பூமாலை சூடிப்
பொருப்பில் அமர்ந்தஉனைத்
தேமாலை கட்டிவந்து
தெண்டனிடேன்; - பாமாலை
கோத்துக்கோத் துன்தாளில்
கொட்டுவேன் பூங்குமரா!
பாத்துப்பாத் தென்னைக்காப்
பாத்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக