செத்தப் பயல்ஜிபி
முத்தென் றொருமடயன்;
பித்துப் பிடிச்ச
பெரும்பேச்சன்; – கெத்தா
உலவுறான் ஊடகத்தில்;
நிலவுறான் கோமாளி
நின்று! 01
வாட்டர் மிலன்புகழ்தி
வாகர் நடிப்பரக்கன்
கோட்டர் குடிச்சவன்போல்
கொக்கறிப்பான்; – கேட்டா
படிச்சவன் என்பான்;
பழஞ்சிவாஜி போல
நடிச்சவன் என்பான்
நகச்சு! 02
ஏங்கஅஅ! ஏங்க!
எனப்பேசி மக்களிடம்
நீங்கா எடம்புடிச்சான்
நேத்தொருவன் – தூங்கப்
பொழுதின்றி வாரான்
பொதுஊட கத்தில்
கொழுத்த முகங்காட்டிக்
கொண்டு! 03
திருச்சியில சாதனா
சென்னையில ஜூலி
உருவாகி ஊருக்கு
ஒருத்தி – வருவதுல
கண்ணு முழிபிதுங்கும்
காட்சிகளின் ஊடகம்;
மண்ணு முழிபிதுங்கும்
மாண்டு! 04
பீடைகள எல்லார்க்கும்
பேசுபொருள் ஆக்குறதால்
ஊடகங்கள் எல்லாம்
ஒழியவே; – நாடிது
பேத்தல் களப்பெரும
பேசக் கொமட்டுலயே
ஏத்தலாம் போல
இருக்கு! 05
மக்க ரசனையில
மண்ணள்ளிப் போடஇங்குக்
குக்கலையே சீயமெனக்
கொண்டாடும்; – நக்கலையே
நல்ல நகச்சுவயா
நாடேற்றுக் கொள்ளும்னா
பல்லிலிக்கும் பார்மனுசப்
பண்பு! 06
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக