சனி, 16 ஆகஸ்ட், 2025

தபால் பெட்டி!


காதல் கடிதத்தைக்
கண்ணீர் மடல்களை
ஓதக் கடல்தாண்டும்
ஓலைகளை – ஆதரவாய்
மின்னும் திருமுகத்தை,
வீங்கா வயிறேந்தும்
நின்றனுக்கா இந்த
நிலை!?
எம்மாம் உணர்வுகளை
ஏக்கக் கனவுகளை
சிம்மா சனமிட்ட
செய்திகளை – இம்மா
நிலத்தார்க்காய் நீசுமந்தாய்!?
நீண்டவர லாற்றைக்
கலந்தாய்ந்தால் நீமடற்குக்
காப்பு!
தொட்டில் குழந்தையெனும்
தூயதொரு திட்டம்தபால்
பெட்டியைப் பார்த்துப்
பிறந்ததுவோ? – குட்டிமடல்
தொட்டிலுக்கா தோண்டினார்
தூங்கும் சவக்குழியை?
இட்டஅஞ்சல் ஏதிலியோ
இன்று!?
வண்ணஞ் சிவப்பழகி
வாழ்நாள் உதட்டழகி
எண்ணம் சுமக்கும்
இடுப்பழகி; – பொன்மடற்கு
மாற்றாந்தாய் என்றாலும்
மாற்றம் உறாததாய்;
ஏற்றமற்றுப் போயினளே
இற்று!?
கஞ்சமா? காசுபணக்
கஸ்டமா? நெஞ்சத்தில்
நஞ்சமா? இன்றிதனால்
நஷ்டமா? – வஞ்சமா?
நூற்றாண்டைத் தாண்டிய
நூதனத்தை நீக்கியது
மாற்றமில்லை; செய்கிறஏ
மாற்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக