திங்கள், 20 ஏப்ரல், 2026

சர்க்கரை வெண்பா!

 

முன்போல் இருக்க முடிகிறதா? சர்க்கரைநோய்

தின்கின்ற தென்னை, தெரிகிறதா? – என்நெஞ்சே!

சீக்கோடு மேலும் சிரம‍ப் படவேண்டாம்

நாக்கோடு வைக்காதே நட்பு!

 

தட்டிலே காண்கிற லட்டையே மேயாதே;

வெட்டியாய் அல்வாவை வேண்டாதே; – சட்டியில்

தீனி பலவிதம் தேடாதே; ரத்த‍த்தில்

சீனி அதிகமாச் சே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக