எத்தனை நூல்கற்றாய்
என்பதல்ல கேள்விநல்
முத்தனைய நூல்கற்றல்
முக்கியம்; – வித்தகநூல்
எள்ளத் துணையேநீ
கற்பினும் கற்பதும்
உள்ளத்தில் தங்குவதாய்
ஓது!
உண்ணீரைப் பால்கலந்து
ஊட்டமுனைந் தாலுமன்னம்
தண்ணீர் தவிர்த்துப்பால்
தன்னையுண்ணும் – நண்பனே!
பன்னூல்கள் உண்டெனினும்
பண்படுத்தி மேலேற்றும்
நன்னூல் களையே
நய!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக