வியாழன், 19 மார்ச், 2026

குண்டிக்கு மேலா குறி!

 

பின்னால் தடவும் பிரசிடெண்ட்! அங்கிருக்க

உன்னாலா காதா ஒழுங்காகச் – சின்னக்

குழந்தையென் றாலும் குமரியென் றாலும்

கிழவியென் றாலுமா கிக்கு!

 

சந்தைப்பார்த் தாலும் தடிக்குமா? பூமரப்

பொந்தைப்பார்த் தாலும் புடைக்குமா? – அந்திவிரி

மெத்தைபார்த் தாலும் விடைக்குமா? மன்னனெனும்

கெத்தைப்பார்க் காதுமனம் கெட்டு!?

 

தடவுவ தாலா தடக்கை? அட!நீ

தொடருவ தேன்உன் துடுக்கை? – படரும்

இடக்கை இயற்றும் இடக்கை மடக்கை

அடக்காய்! அவள்தா டகை!

 

முன்பக்கம் பார்க்க முடியாமல் தானோநீ

பின்பக்க மாகப் பிசைகிறாய்? – மென்குடங்கள்

ரெண்டுடைய தம்புரா Rentடிற்கு வந்ததா?

சுண்டி இழுத்ததா சொல்!

 

கிண்டிக் குதிரையவள்; கீழ்ப்பாக்கப் பைத்தியம்நீ;

கிண்டி விரலால் கிளறுவதேன்? – முண்டிப்போய்ச்

சண்டித் தனம்பண்ணும் ஜல்சா கிழமுனக்குக்

குண்டிக்கு மேலா குறி!?

 

வாய்த்தவய துக்கும் வகிக்கும் பதவிக்கும்

காய்த்த அனுபவ காரணிக்கும் – செய்கின்ற

நற்செயலா இஃது? நரைகிழமே! நாணமுறும்

அற்செயல் தானென் ற‍றி!


பட்டெக்ஸ்சில் தட்டிப் பரிவுடனே வாழ்த்துவதை

இட்டெக்ஸ்டில் ஏசுவதாய் எண்ணாதே; – கொட்டை

எழுத்திலே ஹெட்லைன் எவருமிதைப் பற்றி

எழுதிடக் கூடாதே என்று! 07

 

போட்டோ பிடித்துநெட்டில் போடும் அளவிற்கா

நேட்டோ தலைவ‍!விரல் நீட்டுவாய்? – வீட்டோ

பயன்படுத்தி இந்தப் படத்தை அகற்றப்

பயமுறுத்திக் காட்டுன் பவர்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக