பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
வேளைக்கேற் றாற்போலே வேஷம்; எதிர்ப்படும்
ஆளுக்கேற் றாப்போல் அபிநயம்; – நாளுமிவை
எத்தனைதான் செய்தோம்? இதுதான்நம் வாழ்வென்றால்
செத்தொழிதல் சாலச் சிறப்பு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக