குண்டடிப் பட்டுக் குலைவாய்; குலைந்திடாய்
குண்டியடிப் பட்டுக் குருவம்மா! – உண்டிவில்லால்
பாழும் கனிவிழலாம்; பாவை விழலாமா?
சூழும் விரல்களுக்குச் சொல்!
துப்பாக்கித் தூக்கும் தொழில்செய்யும்
பெண்டிரையும்
உப்பாக்கிச் சேர்ப்பார்தம் உண்டியிலே; – முப்போதும்
கண்ணும் கருத்துமாய்க் காரிகை நீயிலையேல்
மண்ணில் படும்பின் மருங்கு!
கண்டநாய் பின்னாலே கைவைக்கும்; நீயிசைந்தால்
முண்டமாய் முன்னாலே மொய்வைக்கும்; - பெண்பூவே!
புட்டத்தில் கைவைத்தால் போட்டுத்தல்; கண்ணாலே
எட்டத்தில் தூக்கி எறி!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக