இம்மாம் செலவுசெய்து ஈரானைத்
தாக்குவதால்
கும்மி எடுத்துக் குமுறுவதால் -
ட்ரம்பார்
சொ(ல்)லிக்கொள் வதற்கொன்றும் தோன்றவில்லை அம்மஞ்
ச(ல்)லிக்குப் பிரயோ சனம்!
பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
ட்ரம்ப் மைண்ட் வாய்ஸ்-
நாயாய்க் குரைத்தும் நரியாக ஊளையிட்டும்
பேயாக மாறிப் பெனாத்தியும் -
வாயால்
வடைசுட்டும் பார்த்தாச்சு வக்காளி மோடி
தொடைதட்டு கின்றான் துணிந்து!
இனியடுத்த போரை இவன்மேல் தொடுக்க
துணிந்துநான் வந்திவனைத் தொட்டால் -
அணுகுண்டால்
ஆப்படிப் பானென்ற அச்சம் வலுக்கிறது;
மாப்பிளை யோடெதற்கு வம்பு!?
ஜெப வெண்பா!
கத்தரே! உம்பேர் கதைக்கின்ற நாமணக்கும்
அத்தரே! நற்பரி சுத்தரே! – இத்தரையை
ஆனானப் பட்ட அமெரிக்கா ஆளஅருள்
வானாதி தேவா! வழங்கு! 01
ஏசப்பா! நீங்கள் இரட்சித்தால் வெல்வது
லேசப்பா; ட்ரம்ப்ஒரு லூசப்பா; - மோசமாய்ப்
போகிறது போரப்பா! போர்மடியும் வீரரைக்காப்
பாத்தவழி பாரும்அப் பா! 02
குண்டுகளைப் போட்டுக் குழந்தைகளைக்
கொன்றாலும்
கண்டுகொள்ளா முல்லாக்கள் கைகலப்பால் – நொண்டிநொண்டிப்
பின்னங்கால் தங்கள் பிடறிபட நம்மறவர்
பின்வாங்கு கின்றார் பிதா! 03
பரலோகம் வாழும் பரம பிதாவே!
கரவாமல் காட்டும் கருணை; – விரைந்து
செமையாக வைத்துநாம் செய்யத்தான் வேண்டும்
அமைதிமார்க் கத்தை அசால்ட்! 04
உங்களை எண்ணியே உள்ளம் உருகினோம்
எங்களைக் காக்க எழுமையா! - தங்கள்
கரிசனம் வேண்டியே கைதொழு கின்றோம்
பரிசுத்த ஆவியே பார்! 05
அல்லாவும் முல்லாவும் ஆட்டிப் படைத்தாலும்
தில்லாகப் போரிடவோம் ஜீசஸே! – கல்லாநாம்
கட்ட வளைகுடா கண்டிப்பாய் வேண்டுமையா!
நட்டத்தில் போகுதுநம் நாடு! 06
வெனிசுலா போலில்லை; வீரமுடன் ஈரான்
முனிந்துகுத்து கின்றதே முள்ளாய்; – தனிமனிதன்
போர்வெறியென் றாலும்நம் போரலவோ ஆண்டவரே!
தீர்க்கமுடன் வெற்றிபெறச் செய்! 07
வெம்படை என்று வியந்து வியந்துலகம்
பம்மிடச் செய்த படியாலே - நம்படை
சர்ப்பமாய்ச் சீறிச் சமரிலே வெல்லஏன்
கர்த்தாநீ ரட்சிக் கலை!? 08
தோத்திரம் ஆண்டவரே! சோதனை வெற்றிகொளக்
காத்திர மாகநீர் கைகொடுப்பீர்; - சூத்திரம்போல்
எங்கள் தளங்களெலாம் ஏவுகணை பொத்தல்கள்;
மங்காமல் காப்பீரெம் மாண்பு! 09
ஆட்டிடையன் கந்தல் அழுக்குடையன் தண்ணீரை
ஊட்ட மதுவாக்கி ஊட்டியவன் – வாட்டமுற்ற
ஊர்சனத்தின் பாவங்கள் ஓட்டும் இறைதூதன்
ஜீசஸ்க்குச் செய்தோம் ஜெபம்! 10
ஏசு பிரான் – (தன்மனத்தெண்ணுதல்)
என்கால்கை ஆணியையே என்னால் பிடுங்கிட
அன்றுமுதல் இன்றளவும் ஆகவில்லை; – இன்றுநான்
போர்வெல்ல ஆசி புரியனுமாம்; போர்நல்ல
தீர்வல்ல; தோற்கட்டும் சென்று! 11
கள்ளிப்பால் தந்து கதையை முடிக்காமல்
அள்ளிப்பால் தந்த,ட்ரம்ப் அன்னையால் –
விள்ளநாக்
கூசும் படியாகக் கொஞ்சமா ஊர்படுது
லூசுப் பயலாலே லோல்!? 12
மோடி -
மேதகு ட்ரம்பார்க்கு! மெத்த நமஸ்காரம்;
வேதனையொன் றுண்டு விளம்பக்கேள்! –
சோதனையாய்க்
கையிருப்புப் பெட்ரோல் கரைகிறது; மாற்றுவழி
பையிருப்பின் மன்னா! பகர்! 01
ட்ரம்ப் -
போரினிலே நானிருக்கும் போதினிலே
உன்னிருகண்
நீரினிலே நீந்துவதை நிப்பாட்டு; – பாரினிலே
நின்போல் எனைக்கேட்டு நித்தம்
பணிசெய்வார்க்(கு)
ஒன்றென்றால் என்னுதவி உண்டு! 02
மோடி -
அக்கத்தில் ரஷ்யா அகழ்ந்தெடுத்த கச்சாவைப்
கக்கத்தில் வைத்தபடி காத்துளது; – இக்கணமென்
நாட்டினது தேவைக்காய் நான்வாங்க உத்தரவு
கேட்டேன்; இடுவீர்தாக் கீது! 03
ட்ரம்ப் -
முப்பதுநாள் மட்டும் முறையான உத்தரவை
இப்பொழுது நானும் இடுகின்றேன்; – துப்புரவாய்
அப்புறம் வாங்க அனுமதி இல்லைநீ
குப்புறவீழ் தாலும் குளிர்ந்து! 04
மோடி –
வேட்ட வரம்தந்த வேந்தே! எனதரசின்
நாட்கள்உன் னாலே நகர்கிறது; – வாட்டும்உன்
காழ்மொழியும் கூட கனியே; கனல்வீசும்
பாழ்விழியும் கூட பனி! 05
ட்ரம்ப் -
மண்டை அனல்நான் மறந்து மகிழ்ந்திடவே
பண்டைப் புலவன்போல் பாட்டிசைத்தாய்; – தொண்டைக்குள்
ஊதாங் குழல்வைத்த உன்குரலால் ஆனந்தம்
பூதா கரமாச்சு போ! 06
மோடி –
அப்படியே காலையில்நான் ஆய்போக விண்ணப்பம்
இப்பொழுது வைத்தால் இசைவீரோ? – தொப்பையினி
வீங்கவழி இல்லா வெருட்டும் குசுநாற்றம்
தாங்கவழி இல்லா ததால்! 07
ட்ரம்ப் -
அக்மார்க் அடிமைநீ யானதனால் கேட்டபடி
தக்க அனுமதி தந்தேன்;உன் – ஒக்கலிலே
சேய்போல் எனது சினத்தைச் சுமப்பாயேல்
தாய்போல்காப் பேன்உந் தனை! 08
சீமான் vs ட்ரம்ப்!
செந்தமிழன் சீமான்:-
ஹாய்!ட்ரம்ப்! சவுக்கியமா? ஹார்முஸ்
அணையில்போர்
போய்நீஇப் போது புரியணுமா? - வாய்கிழிய
இஸ்ரேல் அழைத்தால் எகிறி அடிப்பாயா?
திஸ்ஈஸ்ராங் கான செயல்! 01
டோனல்ட் ட்ரம்ப்:-
‘சூரனே நீதான்’னான்; ‘சூப்பர் பவர்தான்’னான்;
‘தீரனே தீ வை திரியில்’னான்; - காரணம்
கேட்காமல் போய்க்கெட்டேன்; கேனையன் நானேஎன்
ஆட்சிக்கு வைத்துள்ளேன் ஆப்பு! 02
செந்தமிழன் சீமான் :-
எண்ணித் துணியும்முன் என்னிடம்
கேட்டிருந்தால்
தண்மையாய் உன்னைத் தடுத்திருப்பேன்; – மண்டைக்
கனத்தாலே இன்று களத்தில்பின் வாங்கும்
உனக்கேனோ இம்மாம் உதார்? 03
டோனல்ட் ட்ரம்ப் :-
இட்லருக்கே புத்தி இயம்பிய உன்னிடத்தில்
‘நட்’கழன்ற தால்கேட்க
நான்மறந்தேன்; – நட்புடனே
ஓடிவந்து நின்றால் உதவுவாய் என்றிப்போ
நாடிவந்தேன்; தீர்வொன்றை நல்கு!
04
செந்தமிழன் சீமான் :-
அண்ணன் இருக்கிறேன் அழுது புலம்பாமல்
கண்துடை இந்தா!என் கைக்குட்டை; – தொண்டைக்குள்
முள்ளானார் முல்லாக்கள்; முள்ளை எடுக்கின்ற
முள்வாங்கி என்வாய் மொழி! 05
டோனல்ட் ட்ரம்ப் :-
அதட்டினால் அஞ்சும் அரபுலகம்; ஈரான்
அதற்கெலாம் அஞ்சுகிற ஆளா? – குதற்கமாய்ப்
பேசுகிற என்னையவர் பெண்டெடுக் கின்றார்;நான்
வீசுகிற பாமெல்லாம் வேஸ்ட்! 06
செந்தமிழன் சீமான் :-
மூத்திரச் சந்திலே முட்டாள் உனைமறித்து
ஆத்திரம் தீர அவனடிப்பான்; – சூத்தைநீ
பொத்தியிருந் தாலுண்டா பொல்லாப்பு? கிஞ்சித்தும்
புத்தியிருந் தாலுண்டா போர்!? 07
டோனல்ட் ட்ரம்ப் :-
வயோதிகனைக் கொன்றால் வழிக்குவரும் என்று
சியோனிசம் சொன்னதால் செய்தேன்; - அயோக்கியன்
என்றென்னை இவ்வுலகம் எள்ளிநகை ஆடுமென்ற
சின்ன அறிவுமின்றிச் சென்று! 08
செந்தமிழன் சீமான் :-
நாய்,வருக்கி மீதினிலே நப்பாசை வைப்பதொத்த
ஆய்வறிக்கை ஒன்றை அனுப்பினேன்; – வாய்கொழுத்த
வானரம் நீயதனை வாசித் திருந்தாயேல்
ஏனப்பா இந்தப்போர் இன்று!?09
டோனல்ட் ட்ரம்ப் :-
வாரி இறைக்கின்றார் வான்பரப்பில் ஏவுகணை;
போரின்றி விட்டாலே போதுமெனை; – சாரிசொன்னேன்
மாண்ட கமேனி மகனுக்கு; போர்நிறுத்தம்
வேண்டும் எனப்போய் விளம்பு! 10
செந்தமிழன் சீமான் :-
ஆமைக் கறிவளர்க்கும் ஆயுள்; உடல்பலத்தைச்
சாமை அரிசி தருவிக்கும்; - ஓமைகாட்!
சீமானிப் போரைச் சிலநொடியில்
தீர்த்திடுவேன்
மாமா!நீ உள்ளம் மகிழ்! 11
டோனல்ட் ட்ரம்ப் :-
கையல்ல காலிது காப்பாத்த வேண்டுகிறேன்;
பொய்யல்ல நெஞ்சம் புழுங்குகிறேன்; – அய்யோ!இப்
போர்ச்செலவால் நாடு புதைகுழியில்
வீழும்முன்
சீர்செய்வாய் ஏதேனும் செய்து! 12