சனி, 11 ஜனவரி, 2025

 

எட்டாச்சி இப்பமணி இன்னும் டிபன்வரல;

பொட்டச்சி என்ன பொழப்புபண்றா? - திட்டினா

மூக்கத்தான் சிந்தி முழியக் கசக்குறா;

கேக்கக்கூ டாததெல்லாம் கேட்டு!

 

எம்பசிக்கா கேட்டேன்? எனக்குள் இருக்கின்ற

உம்பசிக்குத் தானே உணவுகேட்டேன் - உம்மேல

அக்கரையா கேட்டஎன்னை அப்படியா பேசுவ?ன்னேன்;

'டக்'குனுகொண் டாந்தாள் டிபன்!

 

ஆத்தாள் சமையல்போல் ஆகுமா? காஞ்சமொளா

சேத்தாலும் தேன்கணக்காத் தித்திக்கும்; - நேத்துவரை

அப்படியோர் தேவ அமுதுண்டேன்; தேவையா

இப்படியோர் சாப்பா டெனக்கு?

 

'ஓட்டல் தொறந்தா உனதிரு கைருசிக்கு

நாட்டில் பலபேர்க்கு நாக்கூறும் - கேட்டுச்சா?'

இன்னேன் அவசிரிச்சா; இம்மாம் பெரும்போய்க்கு

'நின்னேன்' எனத்துடிக்கும் நெஞ்சு!

 

பொன்னாலு மில்லைப் பொருளாலு மில்லைஇங்(கு)

என்னாலு மில்லை இவளாலும்; - சின்னதொரு

பொய்யாலே வாழ்க்கை புரியும்; அதுதானே

நெய்தடவி வச்ச நெசம்!

 

3/1/2024

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக