பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
ஆட்டுக் கறிக்குழம்பு; ஆகா! ருசியரும்பு
நீட்டிச் சுரந்துமிழ் நீர்தளும்பு - போட்டிக்கு
நாக்கிதழை லேசாய் நனைத்துத் தனைத்தீட்டு;
மூக்கிற்கு வாசம் முழம்!
5/1/2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக