பொட்டிக் கடையிலபோய்ப் பொட்டுக் கடலைநூறு
கட்டித் தரச்சொல்லி வாங்கிவா - செட்டிமவன்
எந்திரிச் சுன்னை எடுகாசை இன்னான்னா
வந்து தரேன்னுட்டு வா!
தேங்கா அரைமூடி தேவைக்குப் பச்சமொளா
வாங்கமறந் துட்டு வராதஉன் - ரீங்கார
சைக்கிளில போனா சடுதியா
வந்துடலாம்
பைக்குலபோ னாப்போல் பறந்து!
தேங்காக் கணக்கிலொரு தேன்மிட்டாய் வாங்குனா
மாங்காசைஸ் வீங்கும் மறுகன்னம்; - ஏங்காம
சொல்லி அனுப்புன சோலிமட்டும் பாத்துவா!
எள்ளுருண்டை தாரேன் எடுத்து!
இட்லிக்குச் சட்னி இலாம ஒருவாயும்
பிட்டுவைக்க மாட்டான் பெரியவன்; - தட்டுலயே
ஒங்கப்பன் கைகழுவி ஓயாமப் பேசிடுவான்
எங்கப்பன் ஆத்தாள் இழுந்து!
7/1/2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக