வியாழன், 9 ஏப்ரல், 2026

 'கண்டு புடிச்சான்

அமெரிக்கா வைக்கொலம்பஸ்'
என்று படிக்கும்
எவன்கேட்டான்? - கொண்டுபோய்
அங்காரும் காணவே
ஆகா வகையினில்
இங்கார் ஒளிச்சுவச்சான்
என்று?



நாமாய்ப்போய்ச் சொல்வோம்நம் நெஞ்சு!


பூனை கூற்று!

யாரது என்ஆளா?
என்னையெதிர் பார்த்தாளா?
ஓரவிழி நீர்சொரிஞ்சே
ஓஞ்சாளா? – மாரனிட்ட
அம்புக்கே தேஞ்சாளா?
அங்கங்கள் தீஞ்சாளா?
ம்முக்கே மாஞ்சாளா
மாது!?

ஊருக்குப் போறாளா?
உத்தரவு கோராளா?
பேருக்கும் என்னிடம்
பேசாளா? – யாருக்கோ
காத்திருக் கின்றாளா?
கண்கள் எனக்காய்த்தான்
பூத்திருக் கின்றாளா
பூ!?

இங்கமர்ந்து நானிருக்க
என்னையெதிர் பார்க்காமல்
அங்கெ(ன்)னவே டிக்கை
அவளுக்கு? – பொங்கிவரும்
காதலை நான்சொல்ல
காம்பவுண்ட் ஏறிவந்தால்
வேதனைசெய் கின்றாளே
வீற்று!

சிறுக்கிமகள் நெஞ்சைச்
திருடிவிட யாரும்
குறுக்குவழி வந்துவிடக்
கூடும் – பொறுத்திருந்து
ஏமாந்து போக
இனியும் தயாரில்லை
நாமாய்போல் சொல்வோம்நம்
நெஞ்சு!



 தூணிலும் இருப்பான் – கடவுள்

துரும்பிலும் இருப்பான்.
எனக்கோ
வேட்பு மனுவிலும்
வெண்பாவே தெரிகிறது...

காதலிப்பவன் வேட்புமனு தாக்கல் செய்தால்...

வேட்பு மனுவில் விவரம் தருகிறேன்
ஈட்டிய சொத்துகள் என்னென்று... – ‘கூட்டில்
அசையாத சொத்தாய் அவள்மீது காதல்;
அசைகிற சொத்தாய் அவள்!




திங்கள், 6 ஏப்ரல், 2026

சிங்கத்துக்கே போட்டியா? ஜீன்ஸுக்குமேல் வேட்டியா?

ட்விங்கள்ஸ்டார்க்கு சன்லைட்டோடு டியூட்டியா? – லிங்கத்துக்கு

மேலோர் குறியீடா? ஃபிங்கர் குறிக்கீடா?

மேலோருக்குக் கீழோரீடா மேன்!?

 

மெல்லிடைகுத் தாலமா? மேலிருமத் தாளமா?

அல்லிடைமுத் தாய்வொமா? ஆழமா; – நல்லகுறி

கேப்பொமா? கையொடுகை சேப்பொமா? உன்னுடைய

வாப்பா எனக்குமா மா!


 

இனாம்தர வேண்டாம் இதயத்தைக் காதல்

கனாக்களில் தாராய் கரத்தை; - அனார்கலி!

உன்ரேகை பார்த்தென் உலகின் எதிர்காலம்

என்னென் ற‍றிகின்றேன் இன்று!


ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

 

செத்தானா இல்லையா?
சேதியச் சொல்லாமப்
பொத்தாம் பொதுவாத்தான்
போடுவியா? - நெத்தானாக்
காம்பத்தான் விட்டுக்
கழன்றுவிழும்ம் காய்போலத்
தேம்பாம உண்மையச்
செப்பு!



 மங்கியதே அன்றிஓர்

மண்ணும் நிகழவில்லை
இங்கிதனைச் சொல்கிறதே
இப்படம் - பொங்கியதே
பேரழ கென்னும்
பெரும்பொய்க் கதைகளைப்
பாரறிதல் வேண்டும்
பகுத்து!



 டாஸ்மாக்கில் கட்டிங்கை

டக்கராய் வாங்கியுண்டு
மாஸ்காட்டி‌ ஏமாற்றும்
மங்கையே! - போஸ்காட்டி
போட்டோ எடுப்பதால்
போகலாம் கோட்டைக்கு;
நாட்டுக்கே திஃதால்
நலம்!?



 லைக்குக்கோ, போடும்

கமெண்ட்டுக்கோ, பாவெழுதும்
பைத்தியம்நான் இல்லையடா!
பாவலன்;என் - கைத்திறத்தை
ஒவ்வொருவெண் பாவிலும்
உற்றறிய லாமென்றன்
செவ்வரிகள் அம்மாம்
சிறப்பு!

 

மெல்லிடைகுத் தாலமா? மேலிருமத் தாளமா?

அல்லிடைமுத் தாய்வொமா? ஆழமா? – நல்லகுறி

கேப்பொமா? கண்ணாலம் செய்வொமா? உன்னுடைய

வாப்பா எனக்குமா மா!

ஹார்முஸ் திறப்பு!


 

ட்ரம்ப் கூற்று:-

 

இன்றிரவு எட்டுமுதல் எட்டரைக்குள் ஹார்முஸை

நின்று தனித்தே நெருங்கவுள்ளேன்; – சென்று

திறக்கவுள்ளேன்; கோப்பை நிரப்பவுள்ளேன்; மீண்டும்

பிறக்கவுள்ளேன் உண்டுகளிப் பெய்து! 01

 

திறப்பு விழாநடக்கும் செய்தி அறிந்தோர்

மறக்காமல் ஓடி வருக; – உறங்காமல்

பெக்குகளை ஊற்றிப் பெருமைகளைச் சாற்றிடலாம்

கிக்குகளை ஏற்றிமெனக் கிட்டு! 02

 

பத்துவகை காரசார பண்டங்கள் வாங்கிவைத்துக்

கெத்துடனே நான்விரும்பிக் கேட்டாலே – பொத்தென்று

பொங்கி வழியாதோ போத்தல்? சரசரவென்(று)

அங்கு முடியாதோ ஆஃப்!? 03

 

நான்திறந்த பின்னாடி நான்குரவுண் டுள்ளோடி

வான்பறக்க என்னையுந்தான் வைக்காதா? - பான்படத்தில்

நான்நடிக்க லாகாதா? நாகரீக மாகாதா?

ஃபேன்கூட்டம் கூடாதா பின்பு!? 04

 

எஃப்டின்பைல்ஸ் போலே எனைவாட்டும் ஹார்முஸை

லெஃப்ட்ரைட்வாங் காதுவிடேன் லேசினிலே; - கிஃப்ட்டாக

கார்க்தீவைக் கைப்பற்றிக் கச்சா* எடுத்துவிற்றுப்

போர்ச்செலவை ஈடுசெய்வேன் போய்! 05

 

நேட்டோ* இருந்தென்ன? நேற்றுவரை என்கையில்

வீட்டோ* இருந்தென்ன? விள்வதெனில் – பேட்டா

செருப்பவைஎன் கால்களுக்கு; தேடிவைத்த ஐநா

பொருப்பவை*என் காலுறைகள் போ! 06

 

நாலணா வாயனென்பேன்; நானே எனைப்பார்த்துக்

காலணா ஈயாத கஞ்சனென்பேன்; – மேலணா

டாலரில் தந்தெனது டிக்கியில் முத்தமிடக்

காலமெலாம் காத்திருக்கு கல்ஃப்!* 07

 

 

ஈரான் எதிர்க்குமென்று இஸ்ரேல் பயப்படலாம்;

பேராபத் தெண்ணிஅரப்* பேதுறலாம்; – நேராய்இக்

ஹார்முஸை நான்திறக்க‍க் கண்ணில் பயமில்லை

Barமிசைஎன் தைரியத்தைப் பார்! 08

 

ரிஸ்கியென எண்ணுதல்என் ரேஞ்சுக் கழகில்லை

பஸ்கி எடுக்கும் பயில்வான்நான்; – விஸ்கியைப்

போட்டடுத்த ஹார்முஸ் பொளந்தெடுப்பேன்; ஆபிரகாம்*

Boatடெடுத்(து) ஓட்டிக்கொண்டு போய்! 09

 

கண்ணாடி முன்னாடி கண்டிப்பாய் நான்நின்று

திண்டாடி மன்றாடித் தேவையின்றிக் கொண்டாடி

ஏட்டிலே நாட்டிலே ஈரானோ டின்றைக்கு

டேட்டிலே போடணுமோர் டீல்! 10

 

சொற்பொருள் –

 

கச்சா – பெட்ரோலிய மூலப்பொருள். நேட்டோ – அமெரிக்காவின் போர்ப்படைக் கூட்டாளிகளின் அமைப்பு. வீட்டோ – இதனைக்கொண்டு ஐநாவில் கொண்டுவரப்படும் எந்த தீர்மானத்தையும் இவ்வதிகாரத்தைக் கொண்டு இல்லாமல் செய்துவிடலாம். (அமெரிக்கா ரஷ்யா சீனா போன்ற சிலநாடுகளின் கைகளில் மட்டுமே இவ்வதிகாரம் உள்ளது). பொருப்பவை – பொருப்பான சபை. கல்ஃப் – வளைகுடா. அரப் – அரேபியர்கள். ஆபிரகாம் – உலகின் மிகப்பெரிய அமெரிக்கப் போர்க்கப்பல்.



சனி, 4 ஏப்ரல், 2026

 

வாயாலே தின்றதைக் காலால் கரைப்பதற்குள்

ஓயாமல் நான்நடந்து ஓய்ந்துவிட்டேன்; – தேயாத

தொப்பையே! செய்யாதே தொந்தரவு தீக்கொழுப்புக்

குப்பையை எங்கேனும் கொட்டு!


 

பட்டோ பருத்தியோ பாலியஸ்டர் நைலானோ

கட்டி அசைந்துவரும் கன்னிகையே! – வட்டக்

கழுத்துக்குக் கீழ்பார்க்கும் காளைநான் இல்லை;

இழுத்துமறைக் காதே இனி!

என் பாட்டு!

 

பசித்த வயிற்றுடன் பாமர மக்கள்

நசிந்து நசிந்துருகும் நாளில் - புசிக்கப்

பழச்சாறோ பாகோ பசும்பாலோ அல்ல

பழங்கஞ்சி ஆகுமென் பாட்டு!





 பிரியங்கா காண்டி கூற்று-

மவனை பிரதமராய்
மாத்த முடியாக்
கவலையில் கொண்டாயா
காய்ச்சல்? – சவலையை
ஓடி ஒலிம்பிக்கில்
ஓர்மெடல் வாங்கென்றால்
கூடிச் சிரிக்காதோ
கூ!
பாரா ஒலிம்பிக்கில்
பையனைச் சேர்த்துவிடப்
பாராய்! அதுநற்
பயன்தரலாம் – நேராகக்
குத்தவைத்த நானேசெங்
கோட்டையைப் பற்றிடுவேன்
இத்தாலி அன்னையே
இங்கு!



எனது கவிதை...

 எனது கவிதை இடுப்புக்கு வேட்டி;

தனதென் றணிகிற சட்டை; - மனதுக்கு

நாளும் இதம்தரும் நல்லதோர் உள்ளாடை;

தோளுக் கிடுகிற துண்டு!




வெள்ளி, 3 ஏப்ரல், 2026

இதழுக்கு மேலிரண்டு இச்!

இம்மாம் குறுஞ்செய்தி ஏன்தான் அனுப்புகிறாய்?

சும்மாகை காலைச் சுருட்டிவை; – அம்மாவின்

காய்ச்சல் தணிந்த கணமேநான் அங்கிருப்பேன்

போய்ப்படுப்பாய் இந்த‍இராப் போது!

 

எதிர்வீட்டுப் பார்வதியை ஏறெடுத்துப் பார்க்க

அதிகாலை வாசலின் அண்டைக் – கதிரை

எடுத்திட்டுக் குந்தி இலித்தாயேல் வந்து

நடுமண்டை யில்வைப்பேன் நங்!

 

சம்பளம் தந்துவிட்டேன்; சஞ்சாயம் செய்துவிட்டேன்;

நம்மாலே ஏலுவதை நல்கிவிட்டேன்; – நம்பாமல்

அங்கவள் வேலைபற்றி அங்கலாய்த்துத் தூதுவிடாய்

ரிங்டோனில் வேலைக்கா ரிக்கு!

 

பூக்காரி முன்னாலே புன்னகைத்தால், வீடுவரும்

பாற்காரி முன்னாலே பல்லிளித்தால், – காய்க்காரி

கண்டவுடன் கண்ண‍டித்தால் கண்டபடி ஜொள்வடித்தால்

தண்டனை உண்டுந் தனுக்கு!

 

போரடித்தால் கூலிங்காய்ப் போய்வாங்கி வந்துநீ

பீரடித்தாய் என்றறிந்தால் பிய்த்திடுவேன்; – நேரத்தில்

தூங்கி எழவேண்டும்; தூங்காமல் பான்படம்பார்த்(து)

ஏங்கிவிழ வேண்டாம் இளைத்து!

 

பார்வையில் நன்றாய்ப் படுமாறே உன்பொருளை

நேர்வைத்து விட்டுத்தான் நேற்றுவந்தேன் – பேர்பொறித்த

ஜட்டியைத் தேடுகிற சாக்கில் துணிகளைக்

கட்டிலில்போ டாதே கலைத்து!

 

தாய்வீட்டில் ரெண்டுநாள் தங்க முடிகிறதா?

ஓய்வொழிச்சல் அற்றிருக்க ஆகிறதா? – காய்ந்து

வதங்காதே நாளைநான் வந்தவுடன் வைப்பேன்

இதழுக்கு மேலிரண்டு இச்!


சுந்தர ராசன்

காய்க்காறி பாற்காரி கண்படுவே லைக்காரி

பூக்காரி எதிர்வீட்டான் பொண்டாட்டி - நோக்குகிறேன்

பல்லோரை! யாருமென்றன் பத்தினியின் கால்தூசி

இல்லையீ டென்றே இணைத்து!

 

அகரம் அமுதன்

த‍த்தைபோல் பெண்டாட்டி தாவும் குரங்குபோல்

மெத்தைக்கு வைப்பாட்டி மேதினியில் – பத்திலிரு

பேருக்கு வாய்ப்பதெல்லாம் பேரிறைவன் ஈவது;வே

றாருக் கமையும் இவை!?





 இங்கேதான் அந்தப்போர்;

இவ்வளவு அக்கப்போர்;
தங்குதடை யானஜல
சந்திப்போர்; - இங்கேதான்
ஈரான்போர்; இஸ்ரேல்போர்;
ஈனஅமெ ரிக்கப்போர்;
போராட்ட மானபெரும்
போர்!

வியாழன், 2 ஏப்ரல், 2026


வெறிநாயும் ரெண்டடிகள் விள்ளும்; திரியும்
சொறிநாயும் நாலடிகள் சொல்லும்; - குறிப்பறிந்து
நான்சொல்லித் தந்தால் நரிநாயும் வெண்பாவில்
வான்புகழ் ஈட்டாதோ வந்து!

 ஏப்ரல் ஃபூல்!

மற்றை தினம்போல்
மதிப்புக் குரியதுதான்
இற்றை தினமுமே
என்றாலும் - சற்றே
வரம்புகள் இன்றி
மதிகெட்ட முட்டாள்
டிரம்புக் குகந்த
தினம்!

புதன், 1 ஏப்ரல், 2026

18 டிசம்பர், 2016

 18 டிசம்பர், 2016

 
வேய்த்தோள்; விரல்முருங்கை; விஞ்சு தொடைவாழை;
வாய்த்த இடைநாணல்; மார்தென்னை; -ஆய்ந்திடுங்கால்
சேலை உடுத்திய தேக்கே உடலெனில்இப்
பாலைக்குள் சோலையைப் பார்!
பாலை - பதினாறகவை உடைய பெண்.

16 டிசம்பர், 2016

 16 டிசம்பர், 2016

 
கட்டு மரம்மீண்டும்
'காவேரி' சென்றுளது;
சட்டென ஏமா!
எருமையில்வா! - விட்டுவிடா(து)
'அப்போலோ' போலவக்
'காவேரி' உன்நகலென்(று)
இப்போது காட்ட
எழு!