கத்தி அழுதிரண்டு
கண்ணில்நீர் வார்ப்பவனும்,
பொறம்போக்கும், – சத்தியமாய்ச்
சாராய சாவுக்குத்
தாளா தழவிலையே;
ஆராய வேண்டும்
அதை! 1
நீலிக்கண் நீர்வடிக்கும்
நீசர்ஏர் ஷோஇறப்பில்
போலிக்கண் ணீரும்
பொழியலையே? – காலிகள்போல்
ஓடி ஒளிந்தவர்கள்
உத்தமர்போல் இன்றுமட்டும்
நாடியழு கின்றார்
நடித்து! 2
ஆஸ்கர் வழங்கலாம்
அன்பில் மகேஷுக்கு,
பாஸ்மார்க் கொடுக்கலாம்
பாலாஜிக்கு – ஆஸ்தான
ஆக்டர் களாகும்
அனைத்துத் தகுதிகளும்
நீக்கமற உண்டே
நிறைந்து! 3
பக்கா பிளான்போட்டு
பாவம் அரங்கேற்றிச்
சொக்கா நனையத்
துடித்தழுதால் – வக்காளி!
ஊர்நம்பும் என்றா
உளக்கணக்குப் போட்டுவிட்டீர்?
சார்!அதிலே உண்டுபா
சாங்கு! 4
கோட்டர் சரக்கின்றி
கோழிபிரி யாணியின்றிக்
கூட்டமிது போல்விஜய்க்குக்
கூடிவந்தால் – ஆட்சியை
நாளை பிடிப்பது
நாமெப் படியென்றே
ஆளைக்கொன் றுள்ளார்
அடித்து! 5
அமைதிப் படைஅமா
வாசை இருகண்ணின்
இமைதாழ்த்தி மண்பார்ப்போன்
என்பேன்; – நமையெல்லாம்
நன்றாய்ஏ மாற்றி
நடிக்கும் கரூரானை
இன்றே சிறைபடுத்து
இங்கு! 6
தள்ளுமுள்ளு ஏற்படத்
தார்மீகக் காரணம்
தில்லுமுல்லு ஸ்டாலின்
திமுகவே – மெல்லமெல்ல
ஆம்புலன்ஸை உள்ளே
அனுப்பிச் சலசலப்பை
வீம்புக்கே ஏற்படுத்த
வென்று! 7


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக