வெள்ளி, 17 அக்டோபர், 2025

 அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிராமச்சந்திரம், ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின், உதயநிதி, விஜய் - இவர்கள் அனைவருமே கூத்தாடிகளும் கூத்தாட்ட துறையைச் சார்ந்தவர்களும்தான். ஆக அண்ணாதுறை தொடங்கி நம்மை சினிமாத்துறை ஆண்டுகொண்டிருக்கிறது.

வசனம் பேசி நடிப்பவன் கூத்தாடியெனில் வசனம் எழுதித்தந்தவன் யார்? அவனும் கூத்தோடு தொடர்புடையவன் தானே.
ஆக அண்ணாதுரை தொடங்கி இன்று ஆளும் ஸ்டாலின், உதயநிதி வரை கூத்தாடிகளே. அந்தவரிசையில் புதிதாக இணைந்திருப்பவர்தான் விஜய்...
அண்ணா துரைதொடங்கி
அன்றுமுதல் இன்றும்இம்
மண்ணைச் சினிமாதான்
ஆள்கிறது; - பின்னும்ஓர்
கூத்தாடி வந்துள்ளான்;
கூட்டமவன் பின்னாலும்
காத்தாள நிற்கிறதே
கண்டு!
திரைக்குமுன் தோன்றித்
திகைக்கவைப்போன் மட்டும்
திரைக்கலைஞன் அல்லநன்றாய்ச்
சிந்தி; – திரைக்குப்பின்
நின்றியக்கிக் காட்டுபவன்
நீள்வசனம் தீட்டுபவன்
என்றும் கலைஞனென்றே
எண்!
மணிப்பிர வாள
வசன நடையில்
அணிபிற ழாமல்
அழகாய்ப் - பணம்சேர்
படத்திற் கெழுதும்
பணிசெய் தவர்தான்
தொடக்கத்தில் அண்ணா
துரை!
படத்திற் கெழுதிப்
படந்தயா ரித்துத்
தடத்தைப் பதித்துத்
தமிழர் – இடத்தினில்
வார்த்தைத் திறத்தினால்
வந்தாண்டார் இன்னுயிர்
நீத்த கருணா
நிதி!
கோணல்வாய் ஸ்டாலினுமே
கோலிவுட் ஆக்டர்தான்
நாணல்போல் ஆடி
நடித்தவர்தான்; - காணக்
கிடைக்கும் இணையத்தில்;
கேடான ஆட்சி
கொடுக்கும் இவரும்நம்
கோன்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக