புதன், 22 அக்டோபர், 2025

கதையே வெண்பாவாக...



நண்பன் -
பெண்பார்க்கப் போனாயே
போவார் வருவார்தம்
கண்பார்க்கு மாறுநற்
கட்டழகா? – பெண்ணைப்
பிடிச்சிருக்கா? உன்னைப்அப்
பெண்ணிற்கும் கூடப்
பிடிச்சிருக்கா? இல்லையா?
பேசு!
பெண்பார்க்கச் சென்றவன் -
தன்னந் தனியழைத்துத்
தாவணிப் பெண்ணவள்
கன்னத்தைக் கிள்ளிக்
கடிந்தபடி – உன்போலே
ஒல்லியனே வேண்டாம்
உதைதாங்க மாட்டாய்நீ
செல்லுக! என்றாள்
சிரித்து!
பாக்கத்தான் ஆள்கொஞ்சம்
பஞ்சை; அடிஉதையின்
தாக்கத்தை நன்றாகத்
தாங்குவேன்; – வீக்கம்
வெளியே தெரியாது
வேண்டான் எனாதே
கிளியே!என் றேன்கெஞ்சிக்
கேட்டு!
என்னால் இனி ரிஸ்க்
எடுக்க இயலாது
சொன்னால்கேள் என்றாள்நான்
சோர்வுற்றேன்; – பின்பென்னைத்
தேற்றி ஒருவாறு
தேம்பி அழாய்என்று
போற்றி அனுப்பிவைத்தாள்
பூ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக