வியாழன், 25 டிசம்பர், 2008

கற்றல் சிறப்பு!

நாநனைக்கப் பாலில்லை நாமிளைக்க ஆவழங்கப்
பூநனைந்த பொற்கொடியின் பூமார்பால் -ஞானப்பால்
உண்டதிரு ஞானன் உரைமொழியாய் நா(ம்)மொழிய
கண்ணுற்றே நன்நெறியைக் காண்!

அகரம்.அமுதா

2 கருத்துகள்:

 1. தமிழாய்ந்த புலவருமே புருவம் நெரிப்பார்
  அமிழ்தினிய உம்கவிதைப்பாவைக் கேட்டு.

  சொல் லெல்லாம் சொல்லல்ல; தேமதுரம்
  எள்ளலின்றி எழுதுவேன் நான்.

  வேலுமணி / ஈரோடு

  பதிலளிநீக்கு